’பாட்டு பாடவா… பாட்டு கேட்கவா’ போன்ற பல பிரபல பாடல்களை பாடிய பழம்பெரும் பின்னணி பாடகர் ஏ.எம்.ராஜாவின் பேரன் யஷ்வந்த் ராஜா என்பவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
சென்னை அருகே உள்ள குரோம்பேட்டையில் உள்ள ஒரு வீட்டில் கஞ்சா புகை வாசனை வருவதாக அந்த பகுதியில் உள்ளவர்கள் புகார் அளித்ததையடுத்து அதிரடியாக போலீசார் அந்த வீட்டிற்குள் நுழைந்து சோதனை செய்தனர். அப்போது அந்த வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 3 கிலோ கஞ்சாவை போலீசார் கைப்பற்றினர்
இதனையடுத்து அந்த வீட்டில் மொத்தம் ஆறு பேர் தங்கி இருந்ததாகவும் அதில் சிலர் கல்லூரி மாணவர்கள் என்றும் தெரியவந்தது. ஆறு பேர்களையும் கஞ்சா வழக்கில் கைது செய்த போலீசார், கைது செய்யப்பட்டவர்கள் ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக விசாரணை செய்தனர். அப்போதுதான் அதில் ஒருவரான யஷ்வந்த் ராஜா என்பவர் பழம்பெரும் பின்னணிப் பாடகர் ஏ.எம்.ராஜாவின் பேரன் என தெரிய வந்தது. மரியாதையான குடும்பத்தை சேர்ந்த ஏ.எம் ராஜாவின் பேரன் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளது பொலிசாருக்கே அதிர்ச்சியான செய்தி என்பது குறிப்பிடத்தக்கது
இளையராஜா 'இசைஞானி'…
இந்தியா முழுவதும்…
தனுஷ் இயக்கத்தில்…
ஆர்.ஜே பாலாஜி…
இயக்குனர் அட்லீ…