
உத்தர பிரதேசத்தில் உள்ள மாநிலத்தில் தந்தையின் இறப்புச் சான்றிதழ் வேண்டி விண்ணப்பத்தவருக்கு எதிர்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துகள் என கையெழுத்திட்டுள்ளார் ஒரு நபர்.
உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் உள்ள சிர்வாரியாக கிராமத்தைச் சேர்ந்த லட்சுமி சங்கர் என்ற முதியவர் கடந்த மாதம் 22 ஆம் தேதி இறந்துள்ளார். இதனை அடுத்து சொத்து முதலியவற்றை தன் பெயருக்கு மாற்றுவதற்கு தந்தையின் இறப்புச் சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்துள்ளார் அவரது மகன்.
இதற்காக அவர் கிராமத் தலைவரிடம் சென்றுள்ளார். அப்போது அவர் அளித்த விண்னப்பத்தில் விவரங்களை நிரப்பிவிட்டு ‘ஒளிமயமான எதிர்காலம் அமைய வாழ்த்துகள்’ என அந்த தலைவர் எழுதி அதன் கீழ் கையெழுத்திட்டுள்ளார். அந்த கடிதம் சமூக வலைதளங்களில் பரவ இப்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.





