கையில் துப்பாக்கி…வாயில் குண்டு… வேற லெவலில் ‘பீஸ்ட்’ செகண்ட்லுக் போஸ்டர்….

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடித்து வரும் அவரின் 65வது திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது. இப்படத்திற்கு பீஸ்ட் (Beast) என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. பனியன் அணிந்து கையில் துப்பாக்கியை பிடித்துக்கொண்டு விஜய் ஸ்டைலாக நிற்பது போல் அந்த போஸ்டர் வடிவமைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இன்று விஜயின் பிறந்தநாள் என்பதால் நேற்று இரவு 11.59 மணிக்கு பீஸ்ட் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியானது. கையில் துப்பாக்கி வாயில் குண்டு என அந்த போஸ்டர் வேற லெவலில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு நாளில் 2 போஸ்டர்கள் வெளியானதால் விஜய் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

மேலும், #BeastSecondLook என்கிற ஹேஷ்டேக்கை டிரெண்டிங் செய்து வருகின்றனர்.

 

Published by
adminram