சூர்யா நடிப்பில் சுதா கொங்காரா இயக்கத்தில் உருவாகியுள்ள ’சூரரைப்போற்று’ திரைப்படத்தின் எதிர்பார்ப்பு ஏற்கனவே மிகப்பெரிய அளவில் உள்ள நிலையில் தற்போது அந்த எதிர்பார்ப்பை எகிற வைக்கும் அளவில் ஒரு முக்கிய தகவலை இந்த படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் அவர்கள் தெரிவித்துள்ளார்
ஜிவி பிரகாஷ் குமார் சற்று முன் தனது ட்விட்டர் பக்கத்தில் சூரரைப்போற்று படத்தின் டீசர் வரும் 7-ம் தேதி வெளியாகும் என்று அறிவித்து உள்ளார். இந்த அறிவிப்பால் சூர்யாவின் ரசிகர்கள் மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளனர் என்பதை அவர்கள் உருவாக்கி ஹேஷ்டேக்குகள் இந்திய அளவில் டிரெண்ட் ஆகி வருவதில் இருந்து தெரிய வருகிறது. மேலும் இந்த டுவீட்டில் அவர் ‘பருந்தாகுது ஊர்க்குருவி வணங்காதது என் பிறவி’ என கூறியிருப்பதற்கு என்ன அர்த்தம் என்பது டீசர் வெளியானவுடன் தெரியவரும் என்று கூறப்படுகிறது
சூர்யா, அபர்ணா பாலமுரளி, கருணாஸ், ஜாக்கி ஷெராப், மோகன்பாபு, பரேஷ் ராவல் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை சுதா கொங்காரா இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே ’இறுதிச்சுற்று’ என்ற சூப்பர்ஹிட் படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் ஜிவி பிரகாஷ் இசையில் நிகேஷ் பொம்மிரெட்டி ஒளிப்பதிவில் சதீஷ் சூர்யா படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படம் வரும் கோடை விடுமுறையில் வெளியாகவுள்ளது
லோகேஷ் கனகராஜ்…
பிக்பாஸ் வீட்டில்…
விஜயின் ஜனநாயகன்…
விஜய் டிவியிலிருந்து…
1960களில் தமிழ்நாட்டு…