நானும் திவ்யபாரதியும் அந்த மாதிரி ரிலேசன்ஷிப்பில்? ஓப்பனாக பேசிய ஜிவி

நடிப்பு இசை இரண்டிலும் கலக்கும் ஜிவி: தமிழ் சினிமாவில் நடிகராகவும் இசையமைப்பாளராகவும் இரண்டிலுமே தனி முத்திரை பதித்து வருகிறார் ஜிவி பிரகாஷ். இவரது இசையில் பல படங்கள் ஹிட்டாகியிருக்கின்றன. தொட்டதெல்லாம் பொன் என்ற பழமொழிக்கேற்ப இவருடைய எல்லா ஆல்பங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட். பாடகி சைந்தவியை காதலித்து திருமணம் செய்து கொண்ட ஜிவி இப்போது சைந்தவியை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார்.
கிங்ஸ்டன்: இவர்கள் பிரிவிற்கு ஜிவியின் நடவடிக்கைதான் காரணம் என கிசுகிசுக்கள் வந்தன. குறிப்பாக திவ்ய பாரதியுடனான ரிலேசன்ஷிப்தான் காரணம் என்ற வதந்தி பரவியது. ஆனால் அப்படியெல்லாம் இல்லை என முற்றிலுமாக மறுத்திருக்கிறார் ஜிவி. இவரது நடிப்பில் ரிலீஸுக்கு தயாராகியிருக்கும் திரைப்படம் கிங்ஸ்டன். இந்தப் படத்தை ஜிவிதான் தயாரிக்கவும் செய்திருக்கிறார்.
கெமிஸ்ட்ரி: இந்தப் படத்திலும் ஜிவிக்கு ஜோடியாக திவ்யபாரதிதான் நடித்துள்ளார். ஏற்கனவே பேச்சுலர் படத்தில் ஜிவியும் திவ்யபாரதியும் சேர்ந்து நடித்தனர். அந்தப் படத்தில் அவர்களுக்கிடையேயான கெமிஸ்ட்ரி பெரிய அளவில் பேசப்பட்டது. கெமிஸ்ட்ரி என்பதையும் தாண்டி இருவருக்குமிடையேயான ரொமான்ஸ் பெரியளவில் இருந்தன.அதிலிருந்தே இருவரும் டாக்ஸிக் ரிலேஷன்ஷிப்பில் இருக்கின்றனர் என்பது மாதிரியான செய்திகள் வெளியானது.
அப்படிப்பட்ட உறவு?: ஆனால் அப்படியெல்லாம் இல்லை.எங்களுக்குள் வேறெந்த உறவும் கிடையாது. பேச்சுலர் படத்திற்கு பிறகு திவ்யபாரதியை கிங்ஸ்டன் படத்தில்தான் பார்த்தேன். வெளியிலும் நாங்கள் சந்தித்து கொண்டதும் இல்லை என்று ஜிவி கூறினார். இந்த மாதிரி செய்திகள் எல்லாம் வரும் போது திவ்யபாரதி ஜிவிக்கு அந்த செய்தியை மெசேஜ் அனுப்பி ‘பாருங்க.. என்னதான் எல்லாரும் சொல்றாங்க’ என கூறுவாராம்.
அவ்வளவுதான் எங்களுக்கு இடையேயான உறவு என ஜிவி கூறினார். பேச்சுலர் படத்திற்கு பிறகு மீண்டும் திவ்யபாரதியை ஏன் கிங்ஸ்டன் படத்தில் தேர்வு செய்தீர்கள் என்று கேட்டதற்கு பேச்சுலர் படம் பெரிய ஹிட். அந்தப் படத்தில் இருந்த விஷுவல், ரொமான்ஸ் எல்லாம் அந்த படத்திற்கு வொர்க் அவுட் ஆனது. அதனால் இந்தப் படத்திற்கும் திவ்யபாரதி இருந்தால் சரியாக இருக்கும் என படக்குழு முடிவு செய்தது என ஜிவி கூறினார்.
கிங்ஸ்டன் படத்தை பொறுத்தவரைக்கும் பெரிய பட்ஜெட்டில் உருவாகியிருக்கும் திரைப்படம். இந்தப் படம் ஹிட்டானால் அதன் இரண்டாம் பாகமும் அதை விட அதிக பட்ஜெட்டில்தான் உருவாகும் என்றும் ஜிவி கூறினார்.