Categories: latest news

ஜனநாயகன் இப்படித்தான் இருக்கணும்!.. ஹெச்.வினோத்திடம் ஸ்ட்ரிக்ட்டா சொன்ன விஜய்!..

Jananayagan: கோட் படத்தை முடித்துவிட்டு ஹெச்.வினோத் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார் விஜய். இது அவரின் 69வது திரைப்படமாகும். அதோடு, இந்த படத்தை முடித்துவிட்டு விஜய் தீவிர அரசியலுக்கும் செல்லவிருக்கிறார். எனவே, இது அவரின் கடைசிப்படமாக இருக்கும் என்றே கணிக்கப்படுகிறது.

விஜய் இப்போது தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியின் தலைவராக இருக்கிறார். கட்சியின் மாநாட்டை விழுப்புரம் விக்கிரவாண்டியில் வெற்றிக்கரமாக நடத்தியும் காட்டினார். இந்த மாநாட்டில் விஜய் ரசிகர்கள் சுமார் 8 லட்சம் பேர் வரை கலந்துகொண்டதாக சொல்லப்பட்டது.

பகவந்த் கேசரி: விஜயின் கடைசிப்படம் என்பதால் கண்டிப்பாக இதில் அரசியல் களம் கண்டிப்பாக இருக்கும் என எல்லோரும் நினைக்கின்றனர். அதேநேரம், இது தெலுங்கில் பாலகிருஷ்ணா நடித்து வெளியாகி ஹிட் அடித்த பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் எனவும் சொல்லப்பட்டது. பகவந்த் கேசரி படத்தை 5 முறை பார்த்த விஜய் அந்த பட இயக்குனரையே தமிழில் இயக்க சொன்னதாகவும், ஆனால், அவர் மறுத்துவிட ஹெச்.வினோத்தை இயக்க சொன்னதாகவும் செய்திகள் வெளியானது.

நாளைய தீர்ப்பு: விஜய் அரசியலுக்கு செல்லவுள்ள நிலையில் அவரின் கடைசிப்படம் முதல்வன் போல ஒரு பக்கா அரசியல் படமாக இருக்க வேண்டும் என அவரின் ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், பாலகிருஷ்ணா படத்தின் ரீமேக் என்றதும் அவர்கள் அப்செட் ஆனார்கள். ஆனால், படத்திற்கு நாளைய தீர்ப்பு என தலைப்பு வைக்கபோகிறார்கள் என்கிற செய்தி வந்ததும் அவர்கள் சம்பவம் இருக்குன்னு குஷியானார்கள்.

விஜய் அரசியல்: ஆனால், வெளியான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரில் படத்திற்கு ‘ஜனநாயகன்’ என தலைப்பு வைக்கப்பட்டிருந்தது. அதோடு, செகண்ட் லுக் போஸ்டரில் எம்.ஜி.ஆரின் ஸ்டைலில் ‘நான் ஆணையிட்டால்’ என கேப்ஷன் கொடுக்கப்பட்டிருந்ததோடு, அந்த பாடலில் எம்.ஜி.ஆர் வைத்திருப்பது போல் விஜய் சாட்டையையும் கையில் வைத்திருந்தார். எனவே, இது கண்டிப்பாக பக்கா அரசியல் படமாக இருக்கும் என்றே பலரும் நினைக்கிறார்கள்.

இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய ஹெச்.வினோத் ‘இந்த படம் பற்றி பேசும்போதே விஜய் என்னிடம் ‘இந்த படம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும் பிடிக்க வேண்டும். அரசியல்வாதிகளை விமர்சிக்கும்படி காட்சிகள் வேண்டாம். இது முழுக்க முழுக்க உங்கள் படமாகவே இருக்க வேண்டும் என கூறினார்’ என சொல்லியிருக்கிறார்.. ஹெச்.வினோத் சொல்வதை பார்க்கும்போது இது அரசியல் படம் இல்லை என்றே புரிந்துகொள்ளலாம்.

சிவா

முருகன். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 12 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக இணையதள செய்தி பிரிவில் பணியாற்றியவர். சினிமா, அரசியல் மற்றும் விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர். இந்த தளத்தில் கடந்த 10 ஆண்டுகளாக செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மின் அஞ்சல் முகவரி mugas123@gmail.com

Recent Posts

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

1 hour ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

2 hours ago

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

3 hours ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

4 hours ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

10 hours ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

11 hours ago