பைக்கில் ஹாயாக சுற்றிய வாலிபர்கள் ; போலீஸ் கொடுத்த நூதன தண்டனை : வீடியோ பாருங்க #WebViral

by adminram |

ec3822ac5d5c39f715252b7510f1fe3d

இவர்களை பறக்கும் ட்ரோன் மூலம் போலீசார் கண்காணித்து வருகின்றனர். இது தொடர்பாக சில வீடியோக்கள் வெளியாகி சிரிக்க வைத்தது. திருப்பூரில் கேரம் போர்டை வைத்து தனது முகத்தை வாலிபரின் புகைப்படத்தை யாராலும் மறக்க முடியாது. அதேபோல், ஒரு காதல் ஜோடியை போலீஸ் ட்ரோன் வளைத்து வளைத்து விரட்டிய வீடியோவும் வெளியானது.

இந்நிலையில், சாலையில் 3 வாலிபர்கள் ஹெல்மெட் அணியாமலும், முகக்கவசம் அணியாமலும் ஒரே பைக்கில் ஹாயாக வந்தனர். அவர்களை ஒரு ஆம்புலன்ஸில் போலீசார் ஏற்றினர். அந்த வண்டிக்குள் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர் போல் ஒருவர் இருக்க பீதியான அந்த வாலிபர்கள் எப்படியாவது ஆம்புலன்ஸில் இருந்து வெளியேற முயற்சி செய்த வீடியோவை காவல்துறை வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இனிமேல் அந்த வாலிபர்கள் வீட்டை விட்டு வெளியே வரவே யோசிப்பார்கள் என நெட்டிசன்கள் கிண்டலாக கூறி வருகின்றனர். இந்த வீடியோவும் திருப்பூர் மாவட்டத்திலேயே எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story