பெண்களின் ஆடைகளைத் திருடும் அரைநிர்வாண மனிதன் – சென்னையில் பரபரப்பு !

சென்னை ஆதம்பாக்கத்தில் நள்ளிரவு நேரத்தில் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு வரும் மர்ம மனிதன் பெண்களின் ஆடைகளைத் திருடிச் செல்லும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கிண்டிக்கு அருகேயுள்ள பகுதி ஆதம்பாக்கம். அங்கு அமைந்துள்ள நியு காலணி என்ற பகுதியில் அமைந்திருக்கும் அடுக்குமாடி குடியிருப்புகளில் நள்ளிரவு நேரத்தில் வரும் அரை நிர்வாணமனிதன் பெண்களின் ஆடைகளைத் திருடிச் செல்லும் சம்பவம் நடந்துள்ளது.

இது அங்குள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாக ஆடைகளை திருடு கொடுத்தவர்கள் போலிஸில் புகார் அளித்துள்ளனர். அதன் அடிப்படையில் போலிஸார் அந்த நபரைத் தேடி வருகின்றனர். அந்த ஆள் மனநலம் பாதிக்கப்பட்டவரா? ஏன் பெண்களின் ஆடைகளை மட்டும் திருடுகிறார் என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

Published by
adminram