பார்த்திபனை பீட் செய்த ஹன்சிகா... இவ்வளவு நாளா இது தெரியாம போச்சே!....
நடிகர் பார்த்திபன் வித்தியாசமாக யோசித்து படம் எடுத்து வரும் இயக்குனர்களில் ஒருவர். அவர் மட்டுமே நடித்து வெளியான ‘ஒத்த செருப்பு’ வரவேற்பை பெற்றதோடு, விருதுகளையும் குவித்தது. தற்போது ஒரே ஷாட்டில் ஒரு படத்தை இயக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இதற்காக பல நாட்கள் நடிகர்களை வைத்து ஒத்திகை பார்த்து வந்தார். ஆனால், கொரோனா ஊரடங்கால் அது தொடர்ந்து நடக்கிறதா? அதன் தற்போதைய நிலைமை என்ன என்பது கூட தெரியவில்லை.
ஆனால், ஹன்சிகா மோத்வானி ஒரே ஷாட்டில் ஒரு படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில் மற்றொரு ஆச்சர்யம் என்னவெனில், அப்படத்தில் அவர் ஒரு மட்டுமே நடித்துள்ளார். இப்படத்திற்கு '105 Minutes' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தை ராஜா தஸ்ஸா என்பவர் இயக்கியுள்ளார். இப்படம் தெலுங்கில் உருவாகியுள்ளது. ஒரேநாளில் இப்படத்தை முடித்து தற்போது போஸ்ட் புரடெக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.
நேற்று ஹன்சிகா தனது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில், ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் நேற்று வெளியனாது குறிப்பிடத்தக்கது.