More

ஹேப்பி Announcement…. புது வாழ்க்கையை துவங்கினார் விஷ்ணு விஷால்!

நடிகர் விஷ்ணு விஷால் கடந்த 2011 ஆம் ஆண்டு கல்லூரி தோழியான ரஜினி நட்ராஜை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார். பின்னர் விஷ்ணு விஷால் தன்னுடன் நடித்து வந்த நடிகைகளுடன் நெருக்கமாக பழகி வந்ததால் கணவன் மனைவிக்கு இடையில் பிரச்சனை வெடித்து கருத்து வேறுபாட்டால் இருவரும் விவாகரத்து செய்துகொண்டனர்.

Advertising
Advertising

அதையடுத்து பேட்மிண்டன் வீராங்கனையான ஜுவாலா கட்டாவுடன் நெருங்கி பழகி காதலிப்பதை இருவரும் ஒப்புக்கொண்டனர். விரைவில் இரண்டாம் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்துள்ளதாக ஜுவாலா கட்டா பேட்டி ஒன்றில் கூட கூறியிருந்தார்.

அதன்படி இன்று பிறந்தநாள் கொண்டாடும் காதலி ஜுவாலா காட்டாவிற்கு திருமண பந்தத்துடன் கூடிய மோதிரத்தை அணிவித்து புதிய வாழ்க்கையை துவங்கியுள்ளதாக விஷ்ணு விஷால் ட்விட்டரில் அறிவித்துள்ளார். எனவே கூடிய விரைவில் இவர்களது திருமண தேதியுடன் கூடிய நல்ல சேதி வரலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

 

Published by
adminram

Recent Posts