பிறந்தநாள்… காதலர் தினம்… இறந்தநாள் – சேலத்துக்குப் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆர்த்தி என்ற பெண் காதலர் தினத்தைக் கொண்டாடிய போது எதிர்பாராதவிதமாக விபத்துக்குள்ளாகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆர்த்தி என்ற மாணவி நாமக்கல்லில் மைக்ரோ பயாலஜி படித்து வந்துள்ளார். தந்தை இல்லாத இவர் தாயின் அரவணைப்பில் வாழ்ந்துள்ளார். இந்நிலையில் விடுதியில் தங்கி படிக்கும் ஆர்த்திக்கு அசோக் என்ற இளைஞரோடு பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியுள்ளது.

காதலர் தினத்துக்கு முந்தைய நாள் ஆர்த்திக்குப் பிறந்தநாள். அதனால் அவரது பிறந்தநாள் மற்றும் காதலர் தினம் ஆகியவற்றை விமரிசையாகக் கொண்டாட முடிவெடுத்த அவர்கள் இரு சக்கர வாகனத்திலேயே பெங்களூர் செல்ல முடிவெடுத்துள்ளனர். அது போல சென்ற போது எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளாகி ஆர்த்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அசோக் சிறு காயங்களோடு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

ஏற்கனவே தந்தையை இழந்த ஆர்த்தியின் தாய்க்கு ஆர்த்தியின் இழப்பு மிகப்பெரிய அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

Published by
adminram