More

சாதனைகளை படைத்த ஆச்சி மனோரமாவுக்கு இன்று பிறந்தநாள்…..

1937ம் ஆண்டு மே மாதம் 26ம் தேதி பிறந்தவர் நடிகை மனோரமா. சிறு வயதிலேயே நன்றாக பாடல்களை பாடுவார் என்பதால் நாடகங்களில் நடிக்க துவங்கி பின்னர் சினிமாவில் நுழைந்தவர்.  இந்திய திரையுலகில் இவரை போல சாதனை படைத்தவர்கள் யாருமில்லை. திரைப்படம் மூலம் முதல்வர் ஆன அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மற்றும் ஆந்திர மாநில முதல்வர் என்.டி.ஆர் என 5 முதல்வர்களுடன் நடித்த பெருமைக்குரியவர்.

5 ஆயிரத்திற்கு அதிகமான நாடகங்களிலும், 1200க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் நடித்து சாதனை படைத்தவர். 1000 திரைப்படங்களுக்கு மேல் நடித்ததற்காக இவருக்கு கின்னஸ் விருதும் கொடுக்கப்பட்டது. கலைத்துறைக்கு அவர் செய்த பங்களிப்பிற்காக பத்மஸ்ரீ விருது அவருக்கு கொடுக்கப்பட்டது. புதிய பாதை படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதை பெற்றவர்.  இது போக பல விருதுகளை பெற்றவர். சிவாஜி காலம் துவங்கி விஜய் காலம் வரை சினிமாவில் நான்கைந்து தலைமுறைகளாக நடித்தவர். 

நாடக நடிகையாக துவங்கி நகைச்சுவை, குணச்சித்திரம் என பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்தவர். திரையுலகம் அவரை ஆசையுடன் ‘ஆச்சி’ என அழைத்தது. தமிழ் சினிமாவில் ஆண் நடிகர்கள் மட்டுமே நகைச்சுவை நடிகர்களாக வலம் வந்த நிலையில், பெண்களும் நகைச்சுவை நடிகையாக  வர முடியும் என நிரூபித்தவர்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, சிங்களம் என 6 மொழிகளில் நடித்தவர். கருப்பு, வெள்ளை காலம் துவங்கி 50 வருடங்களாக சினிமாவில் நடித்து சாதனை படைத்தவர். அவரின் புகழை மேலும் மேலும் கூறிக்கொண்டே போகலாம்.

இன்று அவருக்கு பிறந்த நாள்.. மறைந்த ஆச்சி மனோரமாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்….
 

Published by
adminram

Recent Posts