சந்தானத்துக்காக தமிழில் டிவிட் செய்த ஹர்பஜன் சிங்.. இது வேற லெவல்.....

by adminram |

413cd22c0bfaea8c7a05621db37a5d1d-1

ஏராளமான திரைப்படங்களில் காமெடியானாக நடித்தவர் சந்தானம். திடீரென ஹீரோ அவதாரம் எடுத்தார். கடந்த சில வருடங்களாகவே அவர் கதாநாயகனாக மட்டுமே நடித்து வருகிறார். ஆனால், அவர் நடிப்பில் வெளியான ‘தில்லுக்கு துட்டு’ படம் தவிர மற்ற படங்கள் பெரிதாக ஓடவில்லை. ஆனாலும், தனது ஹீரோ கொள்கையை சந்தானம் தளர்த்திக் கொள்ளவில்லை.

21e440c18f53bad6644fce7244e0b5c7

கார்த்திக் யோகி என்பவரின் இயக்கத்தில் அவர் ‘டிக்கிலோனா’ என்கிற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் Time machine கால எந்திரம் பற்றிய கதையுடன் உருவாகியுள்ளது. இப்படத்தில் சந்தானம், யோகிபாபு, கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், மொட்டை ராஜேந்திரன், அனாகா, ஷெரின் காஞ்ச்வாலா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்தில் சந்தானம் 3 வேடங்களில் நடித்துள்ளார்.

இப்படம் செப்டம்பர் 10ம் தேதி ஜீ5(Zee5) ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தியேட்டர் மூடிக்கிடப்பதால் படக்குழு இந்த முடிவை எடுத்துள்ளதாக கருதப்படுகிறது. இப்படத்தின் டிரெய்லர் வீடியோ சில மாதங்களுக்கு முன்பு வெளியான நிலையில், நேற்று 2வது டிரெய்லர் வீடியோவும் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.

0851ffbead75ce8358695d6d8ba24566

இந்நிலையில், இப்படத்தை விளம்பரப்படுத்தும் வகையில், இப்படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்துள்ள ஹர்பஜன் சிங் தனது டிவிட்டர் பக்கத்தில் ‘இந்த வெட்டு புலிக்கு ஏத்த வெட்டு கிளி பார்த்தா சந்தானம். ஜீ எப்பிடி இருக்கீங்க?. டிக்கிலோனா படம் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே!.படம் ரிலீஸ்க்கு ரெடி.நான் இதுல யாருன்னா நீங்களே பாருங்க ’ என சந்தானத்துடன் நிற்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

கடந்த சில வருடங்களாகவே ஹர்பஜன் சிங் டிவிட்டரில் தமிழில் டிவிட் செய்து வருவது நெட்டிசன்களை கவர்ந்துள்ளது.

Next Story