
இந்த படத்தை ஜான் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா என்ற இரட்டையர்கள் இயக்குகின்றனர். இந்த படத்தை ஜேபிஆர்பி ஸ்டாலின் என்பவர் பெரும் பொருட்செலவில் பிரமாண்டமாக தயாரிக்க உள்ளார்என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இந்த படத்தில் தற்போது ஆக்ஷன் கிங் அர்ஜுன் இணைந்து உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு அனைவருக்கும் பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. இந்த படத்தில் அர்ஜூன் வில்லன் வேடத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அர்ஜூன் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ‘ஹீரோ’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து அவருக்கு வாய்ப்புகள் குவிந்து வருகிறது என்பதும் அதில் ஒரு வாய்ப்பு தான் பிரண்ட்ஷிப் படம் என்பது குறிப்பிடத்தக்கது.
Welcome action King @akarjunofficial Onboard. @harbhajan_singh 's #Friendship.@JPRJOHN1 #Losliya #ShamSurya @ImSaravanan_P #SeantoaStudio @CinemaassS @V4umedia_ pic.twitter.com/r7qe2bcz21
— RIAZ K AHMED (@RIAZtheboss) February 17, 2020