ஹர்திக் பாண்ட்யா காதல் விவகாரம் – தந்தைக்கே தெரியாத ரகசியம் !

கிரிக்கெட் வீரரான ஹர்திக் பாண்ட்யாவும் நடிகை நடாஷா இவான்கோவிச்சும் திருமண நிச்சயதார்த்தம் செய்து கொண்ட சம்பவம் தங்களுக்கே தெரியாது என அவரது தந்தை தெரிவித்துள்ளார்.

புத்தாண்டை முன்னிட்டு வெளிநாடு சென்ற கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்ட்யா, தனது காதலியான நடாஷா இவான்கோவிச்சை நிச்சயதார்த்தம் செய்துகொண்டார். இது சம்மந்தமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார்.

இந்நிலையில் ஹர்திக் பாண்ட்யாவின் திருமண நிச்சயதார்த்தம் பற்றி தங்களுக்கே தெரியாது என்றும் புகைப்படங்களைப் பார்த்துதான் தாங்களே தெரிந்து கொண்டதாகவும் சொல்லியுள்ளார் அவரது தந்தை. மேலும் ‘நடாஷா நல்ல பெண். அவர்கள் இருவரும் விடுமுறையைக் கொண்டாடதான் துபாய்க்கு செல்கிறார்கள் என நினைத்தோம். ஆனால் நிச்சயதார்த்தம் விவகாரம் பற்றி எனக்குத் தெரியாது’ எனக் கூறியுள்ளார்.

Published by
adminram