விந்து தானம் செய்யும் தாராளப் பிரபு – ஹரிஷ் கல்யாண் புதிய அவதாரம்

விந்து தானம் செய்யும் மனிதன் ஒருவனின் கதையாக தாராள பிரபு என்ற படம் உருவாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக்களம் கொண்ட படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.  இதை முன்னிட்டு வித்யாசமான கோணங்களிலும் சினிமாக்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.  அதன் ஒரு பகுதியாக தாராளப் பிரபு என்ற படமும் விந்து தானத்தைப் பற்றிய படமாக உருவாகி வருகிறது.

பாலிவுட்டின் முக்கிய வளரும் நட்சத்திரமாக உருவாகி வரும் ஆயுஸ்மான் குர்ரானா நடிப்பில் ஹிட்டடித்த விக்கி டோனர் என்ற திரைப்படத்தின் ரீமேக்தான் தாராள பிரபு. இந்த படத்தின் தமிழ் வெர்ஷனில் பிக்பாஸ் புகழ் ஹரிஷ் கல்யாண் நடித்துள்ளார் அவருக்கு ஜோடியாக தடம் படத்தில் நடித்த தன்யா ஹோப் நடித்துள்ளார்,. மற்றொரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகர் விவேக் நடித்துள்ளார்.

வித்தியாசமான கதைக்களம் கொண்ட இந்த படத்தின் தலைப்பும் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதற்காக தாராளப் பிரபு என நகைச்சுவையாக பெயர் சூட்டியுள்ளனர் இதற்கு சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

Published by
adminram