பொன்னியின் செல்வன் படத்தில் தான் நடிக்கும் கதாபாத்திரத்துக்காக நடிகர் ஜெயராம் 20 கிலோ எடையை குறைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடிப்பவர்களின் பட்டியல் நாளுக்கு நாள் நீண்டு கொண்டே போகிறது. இந்தியாவின் பல மொழிகளில் திறமையானவர்கள் என பேர் போன விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, அமிதாப் பச்சன், விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராய், நயன்தாரா, சரத்குமார், அஷ்வின், லால், ரியாஸ் கான், மோகன் ராம், அர்ஜூன் சிதம்பரம், ஐஸ்வர்யா லக்ஷ்மி உள்ளிட்ட பலர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இப்போது படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு தாய்லாந்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ள ஜெயராம் படத்தில் தான் நடிக்கும் முக்கிய கதாபாத்திரத்துக்காக 20 கிலோ வரை எடை குறைத்துள்ளார். 54 வயதாகும் ஜெயராம் தனது கதாபாத்திரத்துக்காக இவ்வளவு அர்ப்பணிப்பாக செயல்படுவது ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.
Rj balaji…
விமர்சனம் செய்வது…
விஜய் அக்டோபர்…
கார்த்திக் சுப்புராஜ்…
Surya: நடிகர்…