More

இன்னைக்கு தரமான ஒரு குட்டிக்கதை இருக்கு! – மாஸ்டர் இசை வெளியீட்டு விழா அப்டேட்

மேலும், இப்படத்தில் இடம் பெற்ற ‘வாத்தி ரெய்டு’பாடல் நேற்று வெளியானது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மாலை 6.30 மணியளவில் சென்னையில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் நடைபெறவுள்ளது.

Advertising
Advertising

இந்த நிகழ்ச்சி சன் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பாகவுள்ளது. இதை விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். வழக்கமாக தன்னுடைய பட விழாக்களில் கலந்து கொள்ளும் விஜய் மேடையில் ஒரு குட்டிக்கதை சொல்வது வழக்கம். பிகில் திரைப்ப இசை வெளியீட்டில் கூட அவர் கூறிய குட்டிக்கதை அவரை வருமான வரித்துறை சோதனை வரைக்கும் இழுத்து சென்றது.

எனவே, இன்றைய விழாவில் அவர் என்ன குட்டிக்கதை சொல்லுவார் என அவரது ரசிகர்கள் உட்பட பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். சன் தொலைக்காட்சி நேற்று தனது டிவிட்டர் பக்கத்தில் ‘விஜய் கூறும் குட்டிக்கதை என்னவாக இருக்கும்?’ என கேள்வி எழுப்பியிருந்தது.

இந்நிலையில், மாஸ்டர் படத்தில் நடித்துள்ள நடிகர் சாந்தனு தனது டிவிட்டர் பக்கத்தில் ‘இன்னைக்கு தரமான குட்டிக்கதை இருக்கு’ என பதிவிட்டுள்ளார்.

Published by
adminram

Recent Posts