பாஜகவின் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் செயல்பாடுகள் பற்றி அக்கட்சியில் புதிதாக சேர்ந்துள்ள ராதாரவி பாராட்டியுள்ளார்.
திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகளில் மாறி மாறி தஞ்சம் அடைந்து வந்த நடிகர் ராதாரவி, மேடையில் நயன்தாராவைப் பற்றி தவறாகப் பேசியதை அடுத்து அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அதன் பின் அதிமுகவில் இணைந்து பின்னர் பாஜகவில் இணைந்துள்ளார்.
இந்நிலையில் சென்னையில் நடந்த கட்சிக் கூட்டம் ஒன்றில் பேசிய அவர் ‘67 வருட மாகத் திராவிடத்தையே சுவாசித்து வந்தேன். இப்போது பாஜகவில் இணைந்த பின்னர் தேசியத்தைச் சுவாசிக்கிறேன். தமிழகத்தில் பாஜக இன்னும் 200 வருடத்துக்கு ஜெயிக்காது என நானே சொன்னேன். ஆனால் வரும் தேர்தலில் பாஜக வெல்லும். தமிழகத்தைக் காப்பாற்றும் ஒரே கட்சி பா.ஜ.க தான். அமித்ஷா 100 கருணாநிதி மற்றும் 200 ஜெயலலிதாவாக செயல்பட்டு வருகிறார்’ எனக் கூறியுள்ளார்.
மணிரத்தினம் இயக்கிய…
சின்னத்திரையில் தொகுப்பாளராக…
தமிழ் சினிமாவில்…
பொதுவாக பொங்கல்,…
இறுதிச்சுற்று சூரரைப்போற்று…