பார்ப்பதற்கு சாக்லேட் பாய் மாதிரி தெரிவார். மென்மையான காதல் திரைப்படங்களில் நடித்து இளம் மனசுகளை அள்ளுவார். இவரது படத்தில் இடம்பெறும் பாடல்கள் தேனாக இனிக்கும். 80களில் தமிழ்சினிமா ரசிகர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டவர். யார் இவர் என பார்ப்போமா…அவர் தான் நடிகர் சுரேஷ்.
நடிகர் சுரேஷ் ஆந்திராவின் ஸ்ரீகாளஹஸ்தியில் 23.8.1963ல் பிறந்தார். இவரது முழு பெயர் சேஷையா சுரேஷ் பாபு நாயுடு. இவர் இந்திய திரைப்பட நடிகர். தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், டப்பிங் ஆர்டிஸ்ட் என பன்முகத்திறமை கொண்டவர்.
1981ல் வெளியான பன்னீர் புஷ்பங்கள் படத்தில் நடித்து தமிழ்சினிமாவின் முன்னணி கதாநாயகர்கள் பட்டியலில் இடம்பிடித்தார்.
80கள்; முழுவதும் தமிழில் நடித்தார். 90களின் இறுதியில் தெலுங்கு பக்கம் சென்றார். அங்கு 130 படங்களுக்கு மேல் 2003 வரை நடித்து வந்தார்.
2006ல் தமிழ்சினிமா வந்த சுரேஷ், ஸ்ரீகாந்த் நடித்த கிழக்கு கடற்கரை சாலை படத்தில் நடித்துள்ளார். 2010ல் அஜீத்குமாருடன் அசல் படத்திலும், 2012ல் பாலாஜி மோகன் இயக்கத்தில் காதலில் சொதப்புவது எப்படி படத்திலும் நடித்துள்ளார். விஜய் டிவியில் கிச்சன் சூப்பர்ஸ்டார் நிகழ்ச்சியின் 6வது சீசனில் நடுவராகக் கலந்து கொண்டார்.
2017ல் சித்தார்த் இயக்கத்தில் அவள் படத்தில் குணச்சித்திர வேடத்தில் நடித்தார் சுரேஷ். இவர் 299 படங்கள் நடித்துள்ளார். வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கும் 300வது படம் தான் பார்ட்டி. சுரேஷ் சென்னையில் உள்ள ஆக்ஸ்போர்டு ஆங்கில மேல்நிலைப்பள்ளியில் தான் படித்தார். அனிதா என்பவரை மணம் செய்து கொண்டார். பின்னாளில் விவாகரத்து வாங்கி விட்டார். நிகில் என்ற ஒரு மகன் இவருக்கு உள்ளார்.
சுரேஷ் உடன் நளினி 9 படங்களும், நதியா 6 படங்களும், ரேவதி 5 படங்களும், கவுண்டமணி 5 படங்களும், சுலக்ஷனா 4 படங்களும், பிரபு 3 படங்களும் நடித்துள்ளார். கார்த்திக்குடன் இணைந்து இளஞ்சோடிகள் படத்தில் நடித்தார்.
ஆசை படத்தில் அஜீத்குமாருக்கு டப்பிங் வாய்ஸ் கொடுத்தார். 1989ல் வெளியான இதயத்தைத் திருடாதே படத்தில் நாகர்ஜூனாவிற்காக டப்பிங் வாய்ஸ் கொடுத்தார். மேலும் இவருக்காக 1989ல் சிவா, 1997ல் ராட்சசன், 2012ல் ஊட்டி, 2016ல் மனம் ஆகிய படங்களுக்கும் டப்பிங் வாய்ஸ் கொடுத்துள்ளார். 2018 முதல் 2020 வரை சன்டிவியில் ஒளிபரப்பான குஷ்பூ சுந்தரின் லட்சுமி ஸ்டோர் தொடரில் நடித்து வந்தார்.
குறிப்பிடத்தக்க சில படங்களை இங்கு பார்க்கலாம்.
பன்னீர் புஷ்பங்கள், துணை, இளஞ்சோடிகள், மஞ்சள் நிலா, கோழி கூவுது, வெள்ளை ரோஜா, நான் பாடும் பாடல், அபூர்வ சகோதரிகள், அலைபாயும் நெஞ்சங்கள், எத்தனை கோணம் எத்தனை பார்வை, ஆலய தீபம், உன்னை நான் சந்தித்தேன், ராஜாத்தி ரோஜாக்கிளி, ஹலோ யார் பேசறது? ஆகாய தாமரை, நவக்கிரக நாயகி, உரிமை, உன்னிடம் மயங்குகிறேன், எங்கள் குரல், செல்வி, மருமகள், மரகத வீணை, உன்னை தேடி வருவேன், உனக்காகவே வாழ்கிறேன், சிகப்பு மலர்கள், மவுனம் களைகிறது, இனிய உறவு பூத்தது, மந்திரப்புன்னகை, பொன் மாலை பொழுது, பூவே இளம் பூவே, கிழக்கு ஆப்பிரிக்காவில் ஷீலா, ராஜநடை, புது வசந்தம், என் வீடு என் கணவர், வீட்ல விசேஷங்க, விட்னஸ், தாலி புதுசு, உள்ளத்தைக் கிள்ளாதே, வல்லக்கோட்டை,
பன்னீர் புஷ்பங்கள்
1981ல் வெளியான இப்படத்தை பாரதி வாசு இயக்கினார். அதாவது சந்தானபாரதியும், பி.வாசுவும் சேர்ந்து இயக்கினார். சுரேஷ், சாந்தி உள்பட பலர் நடித்துள்ளனர். ஆனந்த ராகம், கோடை கால காற்றே, பூந்தளிர் ஆட, வெங்கயா சாம்பாரும் ஆகிய பாடல்கள் இடம்பெற்றுள்ளன.
கோழி கூவுது
1982ல் வெளியான இப்படத்தை கங்கை அமரன் இயக்கினார். ஆர்.டி.பாஸ்கர் தயாரிப்பில், இசையை இளையராஜா அமைத்தார் இப்படத்தில் சுரேஷ், சில்க், விஜி உள்பட பலர் நடித்துள்ளனர். எங்கும் நிறைந்தொளிரும், ஒருமையுடன், வீரைய்யா வீரைய்யா, ஆயர்பாடி கண்ணானே, அன்னையே அன்னையே, பூவே இளைய பூவே ஏதோ மோகம் ஏதோ தாகம், அண்ணே அண்ணே, பூவே இளைய பூவே ஆகிய பாடல்கள் படத்தில் இடம்பெற்றுள்ளன.
வெள்ளை ரோஜா
1983ல் வெளியான இப்படத்தின் இயக்குனர் ஏ.ஜெகந்நாதன். வி.விசுவநாதன் தயாரிப்பில் வெளியான படத்தில் சிவாஜி, பிரபு, அம்பிகா, ராதா, சுரேஷ் உள்பட பலர் நடித்தனர். இளையராஜாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர். சோலைப்பூவில் மாலை தென்றல், ஓ மானே மானே…, தேவனின் கோவில், நாகூர் பக்கத்திலே, வாடி என் ஆகிய பாடல்கள் இடம்பெற்றுள்ளன.
ஆகாய தாமரைகள்
1985ல் வி.அழகப்பன் இயக்கத்தில் ஆர்.ஸ்ரீதரின் தயாரிப்பில் வெளியான படம். இசை கங்கை அமரன். சுரேஷ், ரேவதி, ஜெய்கணேஷ், கவுண்டமணி, எஸ்.எஸ்.சந்திரன், சத்யராஜ், செந்தில், மனோரமா உள்பட பலர் நடித்தனர். ஆனந்த வெள்ளத்திலே ஆடட்டும் உள்ளங்கள் ஆகிய பாடல்கள் இடம்பெற்றுள்ளன.
பூவே இளம் பூவே
பூவே இளம் பூவே.
1987ல் விஜயா கலர் பிக்சர்ஸ் தயாரிப்பில் சுரேஷ், நதியா மற்றும் பலர் நடித்த படம் பூவே இளம் பூவே. சிருமுகை ரவி படத்தின் இயக்குனர். படத்தின் இசை அமைப்பாளர் அமல் தேவ். பாடல்கள் அனைத்தும் பட்டையைக் கிளப்பும் ரகங்கள்.
ராசி பொருத்தம் உண்டு, புத்தம் புதியது முத்தம், கங்கை நதி மறையலாம், பாட்டு பாட வந்தேன், குளிரடிக்குது குளிரடிக்குது, ஒரு பட்டாம் பூச்சி ஆகிய பாடல்கள் இடம்பெற்றுள்ளன.
தொடர்ந்து திரைப்பிரபலங்கள்…
ஜன நாயகனை…
கடந்த 15…
பொங்கல் ரிலீஸாக…
நடிகர் ரஜினிகாந்த்…