More

தமிழ் சினிமா ரசிகர்களை உருகச் செய்த ஜி.வி.பிரகாஷ்…

தமிழ் திரைப்படத்துறையின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் ஜி.வி.பிரகாஷ்குமார். இவர் ஒரு இளம் இசையமைப்பாளர் என்பதாலோ என்னவோ இவரது இசையில் இளைஞர்கள் மகுடிக்கு கட்டுப்பட்ட பாம்பாக ரசித்து ஆடுகின்றனர். இவரது படங்களின் இசை எப்போதும் தூக்கலாகவே இருக்கும். மேலும் இவர் தயாரிப்பாளராகவும், பின்னணி பாடகராகவும், நடிகராகவும் உள்ளார். ரொம்பவும் ஸ்டைலான அழகான இளம் உள்ளங்களைக் கொள்ளை கொண்ட இசையமைப்பாளரான இவருக்கு இன்று பிறந்தநாள். இவரைப்பற்றிய சிறுகுறிப்புகள். 

இவர் 13.6.1987ல் சென்னையில் பிறந்தார். இவர் ஏ.ஆர்.ரஹ்மானின் அக்கா மகன். 1993ல் வெளியான படம் ஜென்டில்மேன். இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இந்த படத்தில் சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே…என்ற பாடலை பாடி ஒரு பாடகராக தமிழ்திரையுலகில் முதன்முதலாக காலடி தடம் பதித்தார். இந்தப்படத்தில் அர்ஜூன், மதுபாலா, கவுண்டமணி, செந்தில் உள்பட பலர் நடித்துள்ளனர். பின்னர் இயக்குனர் ஷங்கரின் தயாரிப்பில் வசந்தபாலன் இயக்கத்தில் உருவான வெயில் படத்தில் தான் முதன் முதலில் இசை அமைப்பாளராக அறிமுகமானார். 

உருகுதே…மருகுதே…ஒரே பார்வையாலே…
உலகமே சுழலுதே உனைப் பார்த்ததாலே….
தங்கம் உருகுதா அங்கம் கரையுதா…
வெட்கம் உடையுதா…முத்தம் தொடருதா…
சொக்கித்தானே போகிறேனே மாமா
கொஞ்ச நாளா…

என்ற பாடலைக் கேட்டுப்பாருங்கள். அப்படியே உங்களைக் கட்டிப்போட்டு விடும் இந்தப் பாடல். தனது முதல் படத்திலேயே ரசிகர்களை உருகச் செய்திருப்பார். இதுதான் ஜி.வி.பி. இசையமைத்த முதல் படம். யார்;டா…இது…இவ்வளவு அருமையா இசையமைத்தது என்று தமிழ்சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்த படம் இது. இப்படத்தின் பாடல்கள் அத்தனையும் சூப்பர்ஹிட். இவர் அஜீத்குமார் நடிப்பில் உருவான கிரீடம் படத்திற்கும் இசையமைத்துள்ளார். தமிழ்சினிமாவில் இவர் ஒரு கடின உழைப்பாளி என்று சொன்னால் மிகையில்லை. 

Advertising
Advertising

இவரது தந்தையின் பெயர் ஜி.வெங்கடேஷ், தாயார் பெயர் ரைஹானா. இவர் ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரி. இவரும் ஒரு பின்னணி பாடகிதான். 27.6.2013ல் சைந்தவி என்னும் பின்னணி பாடகியை திருமணம் செய்து கொண்டார். இன்னும் சில நாட்களில் இவரது திருமண நாளும் வரப்போகிறது.  

இவர் வெயில், கிரீடம், பொல்லாதவன், நான் அவள் அது, சேவல், அங்காடி தெரு, ஆயிரத்தில் ஒருவன், இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், மதராசப்பட்டினம், ஆடுகளம், தெய்வத்திருமகள், மயக்கம் என்ன, முப்பொழுதும் உன் கற்பனைகள், ஓரம்போ, எவனோ ஒருவன், காளை, குசேலன், தாண்டவம், சகுனி, ஏன் என்றால் காதல் என்பேன், பென்சில், அசுரன், சூரரைப் போற்று, குப்பத்து ராஜா, வாட்ச்மேன், புரூஸ்லி, லென்ஸ் ஆகிய படங்களில் இசை அமைத்துள்ளார்.  தற்போது சர்தார், வாடிவாசல், அடங்காதே, 4ஜி, ஜெயில், ஆயிரத்தில் ஒருவன் 2 ஆகிய படங்களில் இசை அமைத்துள்ளார். மேலும் இவருக்கு நிறைய படங்கள் கைவசம் உள்ளது. ரொம்பவும் பிசியான இசை அமைப்பாளராகி விட்டார் ஜி.வி.பி.

2010ல் மிர்சி மியூசிக்கல் அவார்டைப் பெற்றார். இவர் இசையமைப்பில் உருவான மதராசப்பட்டினம் படத்தில் பூக்கள் பூக்கும் தருணம் என்ற பாடல் சிறந்த பாடலாக தேர்வு பெற்றதற்காக இவ்விருதைப் பெற்றார். 2011ல் சிறந்த இசையமைப்பாளருக்கான பிலிம்பேர் விருதை தனது ஆடுகளம் படத்திற்காகப் பெற்றார். 

இவர் குசேலன், நான் ராஜாவாகப் போகிறேன், ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை, தலைவா, டார்லிங், திரிஷா இல்லனா நயன்தாரா, நாச்சியார், பென்சில் ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது கள்வன், ஐங்கரன், அடங்காதே ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இன்று அவரது பிறந்தநாள்…. இவரது பணி மென்மேலும் சிறக்க நம்ம டீம் சார்பாக வாழ்த்துக்கள். 

Published by
adminram

Recent Posts