
பொதுவாக தமிழ் சினிமாவில் ஒரு இயக்கனர் ஒரு கதையை தயார் செய்தவுடன் ஒரு ஹீரோவை அனுகுவார். ஆனால், சில காரணங்களால் அந்த ஹீரோ நடிக்க முடியாமல் வேறு நடிகர் நடிப்பார். இது காலம் காலமாக நடக்கும் கதைதான். அஜீத்திற்கு கூறப்பட்ட கதைகளில் சூர்யாவும், விஜய்க்கு கூறப்பட்ட கதைகளில் வேறு ஹீரோக்களும் நடித்துள்ளனர்.
Also Read

அதேபோல், மலையாள இயக்குனர் பாசில் இயக்கத்தில் விஜயும், ஷாலினியும் நடித்து 1997ம் ஆண்டு வெளியான திரைப்படம் காதலுக்கு மரியாதை. இப்படம் மலையாளத்தில் வெளிவந்த ‘அணியதிப்ராவு’ படத்தின் ரீமேக் ஆகும். இப்படத்தில் முதலில் நடிக்கவிருந்தது அப்பாஸ்தானாம். அவரின் மேனேஜர் கால்ஷீட்டில் சில குளறுபடிகளை ஏற்படுத்தி விட அதன்பின் விஜய் நடித்தாராம்.
இப்படத்தில் நடித்ததற்காக விஜய்க்கு சிறந்த நடிகருக்கான விருது தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.



