இந்த நிலையில் திடீரென இன்று தல மற்றும் தளபதி ரசிகர்கள் இணைந்து ஒரு ஹேஷ்டேக்கை இந்திய அளவில் ட்ரண்ட் செய்து வருகின்றனர். தல, தளபதி ரசிகர்கள் மட்டுமின்றி இந்த ஹேஷ்டேக்கை ரஜினி, கமல், சூர்யா, தனுஷ், சிம்பு உள்பட முன்னணி நடிகர்களும் ரசிகர்களும் இந்த பகிர்ந்து வருவதால் பகிர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
தெலுங்கு நடிகர்கள் தான் ரியல் நடிகர்கள் என்ற ஒரு ஹேஷ்டேக் தெலுங்கு திரையுலகை சேர்ந்த ரசிகர்கள் டுவிட்டரில் டிரெண்டு செய்தனர். இந்த ட்ரெண்டில் தமிழ் நடிகர்களை ஒரு சிலர் கிண்டல் அடித்து மீம்ஸ் பதிவு செய்தனர். இதனால் கொதித்தெழுந்த தல தளபதி ரசிகர்கள் #UnrivalledTamilActors என ஒரு ஹேஷ்டேக்கை பதிவு செய்து அதை இந்திய அளவில் ட்ரண்ட் செய்து வருகின்றனர். சில மணி நேரத்தில் இந்த ஹேஷ்டேக் உலக அளவில் டிரண்டாக வாய்ப்பு உள்ளது
தல மற்றும் தளபதி ரசிகர்கள் தங்களுக்குள் சண்டை போட்டுக் கொண்டாலும் ஒட்டுமொத்த தமிழ் நடிகர்களுக்கு ஒரு இழுக்கு என்றால் ஒன்று சேர்ந்து செயல்படுவதை பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருப்பதாக டிவிட்டர் பயனாளிகள் தெரிவித்து வருகின்றனர்
தமிழ் சினிமாவில்…
நாம் எதேச்சையாக…
ஹெச்.வினோத் இயக்கத்தில்…
திரையுலகில் ஒரு…
நடிகர் சிவக்குமார்…