இவரின் வாய்வு கொசுக்களைக் கொல்லும் – உலகை ஏமாற்றிய இணையதளம் !

Published On: December 14, 2019
---Advertisement---

25537714e7a69e96337977b6593c6b9b

ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ihlayanews.com என்ற ஒரு இணைய தளத்தில் ஒரு நபரின் ஆசனவாய் வாய்வு கொசுக்களை கொல்கிறது என செய்தி வெளியிட்டு உலக ஊடகங்களை ஏமாற்றியுள்ளது.

உகாண்டாவைச் சேர்ந்த 48 வயதான ஜோ ருவாமிராமாவின் என்ற மனிதர் வெளியேற்றும் வாய்வு 6 மீட்டர் சுற்றளவில் கொசுக்களைக் கொல்கிறது என்று ihlayanews.com என்ற இணையதளம் செய்தி வெளியிட்டது. இந்த செய்தியை கேட்டு மூக்கில் விரல்வைத்த பல வெளிநாட்டு ஊடகங்களும் இதைப் பகிர்ந்தன.

இந்த ஆச்சர்யமான மனிதனிடம் தொடர்புகொள்ள முயன்ற ஸ்னோப்ஸ் என்ற ஊடகம் அப்படி ஒரு மனிதரே இல்லை என சொல்லியுள்ளது. செய்தியில் உள்ள புகைப்படத்துக்கு சொந்தக்காரர் காங்கோ நாட்டைச் சேர்ந்தவர். எபோலா வைரஸ் பீதி ஆப்பிரிக்காவையே உலுக்கியபோது அவர் சோதனை செய்யச் சென்றிருக்கிறார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம்தான் இது என செய்தி வெளியிட்டுள்ளது.

ihlayanews.com இணையதளத்தின் உதவி ஆசிரியர்கள் தாங்கள் வேடிக்கையாக பேசிக் கொண்டிருந்ததை வைத்து ஒரு செய்தியை வெளியிட்டிருக்கிறார்கள். இதை மற்ற ஊடகங்களும் உண்மை என நம்பி பரப்பியுள்ளனர்.

Leave a Comment