Home News Reviews Throwback Television Gallery Gossips

ஹீரோ வசூலில் ஏமாற்றம் – விடுமுறையிலும் தியேட்டருக்கு வராத மக்கள் !

Published on: December 24, 2019
---Advertisement---

341531da2e989362de24faa063fbc829

சிவகார்த்திகேயன் நடிப்பில் டிசம்பர் 20 ஆம் தேதி வெளியான ஹீரோ படம் எதிர்பார்த்த வசூலைப் பெறவில்லை என சொல்லப்படுகிறது.

நம்ம வீட்டுப் பிள்ளை படத்துக்குப் பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான ஹீரோ திரைப்படம் கடந்த வாரம் ரிலீசானது. இந்தப் படத்தில் அவரோடு அர்ஜுன் பாலிவுட் நடிகர் ஆகியோர் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். எதிர்பார்ப்போடு வெளியான இந்த படத்துக்கு முதல் நாளில் இருந்தே கூட்டம் வரவில்லை என சொல்லப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் சுமாரான கதைக்களம் கொண்டு உருவாக்கப்பட்டிருப்பதாலும் மோசமான விமர்சனங்களாலும் அடுத்தடுத்த நாட்களிலும் வசூல் பெரிதாக இல்லை என சொல்லப்படுகிறது.

கிறிஸ்மஸ் பண்டிகையை ஒட்டி ஒரு வாரகாலம் தொடர் விடுமுறை வருவதால் அதை குறி வைத்து வெளியான இந்தப் படம் , ரசிகர்களை ஈர்க்காததால் வசூலில் பெரும் சறுக்கலை சந்தித்து உள்ளது.  ஒட்டு மொத்தமாக மூன்று நாட்களில் தமிழக திரையரங்குகளில் 5 கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்துள்ளதாக திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Comment