சூர்யாவின் அடுத்த படத்தில் ’மாஸ்டர்’ நாயகி தான் ஹீரோயினியா?

Published on: January 27, 2020
---Advertisement---

35f243e574ea0b2bcfa6be1864426418

சூர்யா நடித்து முடித்துள்ள சூரரைப்போற்று என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை ஏப்ரல் 9ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டு இருப்பதாகவும், இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

Also Read

இந்த நிலையில் இயக்குனர் ஹரி இயக்கத்தில் சூர்யா ஒரு படத்தில் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. இதனை அடுத்து இந்த படத்தின் நாயகி தேர்வு நடைபெற்று வருவதாக கூறப்பட்ட நிலையில் தற்போது இந்த படத்தில் மாளவிகா மோகனன் நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே விஜய் நடித்து வரும் மாஸ்டர் படத்தின் நாயகியாக மாளவிகா மோகனன் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது 

மேலும் இன்னொரு இளம் நடிகையிடமும் ஹரி குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது

Leave a Comment