Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

கோமியம் கொரானாவை குணப்படுத்தும் என இந்துக்களே நம்புவதில்லை – ராஷி கண்ணா காட்டம்

இந்தியா முழுவதும் கொரானா வைரஸுக்கு 4 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளர். 109 பேர் உயிரிழந்து விட்டனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிகை 621 ஆக அதிகரித்துள்ளது. எனவே, பொதுமக்கள் வெளியே வராதபடி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.�

1c34c763ea18af8740ffc1ce3f95479b

இதற்கிடையில் டெல்லி நடைபெற்ற இஸ்லாமிய மாநாட்டில் கலந்து கொண்டு தமிழகம் திரும்பிய பலரும் கொரானா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.எனவே, அவர்கள் தாமாக முன்வந்து சோதனை செய்து கொள்ள வேண்டும் என அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இதைத் தொடர்ந்து இஸ்லாமியர்களால்தான் கரோனா வைரஸ் தமிழகத்தில் அதிகமாக பரவுகிறது என சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், அயோக்யா, இமைக்கா நொடிகள் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை ராஷி கண்ணா தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை இட்டுள்ளார்., அதில் அவர் கூறியிருப்பதாவது:

99.99 சதவீத இந்துக்கள் மாட்டு மூத்திரத்தை குடிப்பதில்லை. அது கொரானவை குணப்படுத்தும் என்றும் நம்புவதில்லை. அதேபோல் 99.99 சதவீத இஸ்லாமியர்கள் தப்லீக் ஜமாஅத் நிகழ்வை ஆதரிக்கவுமில்லை. அந்த நிகழ்ச்சியில் மவுலானா சாத் சொன்னதை ஏற்கவுமில்லை. கொரனா வைரஸ் மதம் பார்ப்பதில்லை. சாதி, மதம் பேதமின்றி யாராக இருந்தாலும் அது கொல்கிறது. எனவே, ஒருவரை குற்றம் சொல்வதை நிறுத்திவிட்டு கரோனாவுக்கு எதிரான இந்த போரில் ஒன்றாக செயல்படுவோம் என அவர் கூறியுள்ளார்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top