என் காலை பிடித்து தடவி… இயக்குனர் மீது பாலியல் புகார்.. மீண்டும் ஸ்ரீரெட்டி

நடிகை ஸ்ரீரெட்டி தெலுங்கு நடிகர்கள், இயக்குனர்கள் மற்றும் தமிழில் ஏ.ஆர்.முருகதாஸ், ராகவா லாரன்ஸ் உள்ளிட்ட பலரின் மீதும் பாலியல் புகார்களை கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர். அனைவரும் தன்னை படுக்கையில் பயன்படுத்திக்கொண்டு வாய்ப்பு கொடுக்கவில்லை எனக்கூறி வருகிறார்.

இந்நிலையில், பாலிவுட் இயக்குனர் ராம்கோபால் வர்மா தனது படத்தில் பணிபுரியும் ஆடை அலங்கார வடிவமைப்பாளரின் காலை பிடித்த பிடி ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இதைத்தொடர்ந்து தனது முகத்தில் பதிவிட்டுள்ள ஸ்ரீரெட்டி ‘ ராம்கோபால் வர்மா எனது காலை தொட்டு நீ ஒரு தேவதை என்றார். அதன்பின் எனக்கும் வாய்ப்பும் கொடுக்கவில்லை. தற்போது வேறு ஒரு பெண்ணின் காலை பிடித்துக்கொண்டிருக்கிறார். இது என்னை காயப்படுத்தியுள்ளது’ என பதிவிட்டுள்ளார்.

Published by
adminram