மேற்கு வங்க மாநிலத்தில் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் மது வீடுதேடி அனுப்பப்படும் என அம்மாநில மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
இந்தியா முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு 15 நாட்கள் கடந்துள்ளன. இந்நிலையில் அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமல் மக்கள் எவ்வளவு கஷ்டப்படுகிறார்களோ அந்த அளவுக்கு மது கிடைக்காமல் மது அடிமைகளும் கஷ்டப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் மது கிடைக்காத மன உளைச்சலில் குடி காரர்கள் சிலர் தற்கொலைகளும் செய்து வருகின்றனர்.
எப்படியும் ஏப்ரல் 15 ஆம் தேதிக்கு பிறகும் ஊரடங்கு நீடிக்கும் என சொல்லப்பட்ட நிலையில் இந்த பிரச்சனை மாநில அரசுகளுக்கு மிகப்பெரிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. அதனால் மேற்கு வங்க அரசு தனது மாநில குடிமகன்களுக்கு மகிச்ழ்ச்சி அளிக்கும் விதமாக ஒரு அறிவிப்பை அறிவித்துள்ளது.
ஒவ்வொரு நாளும் 2 மணி முதல் 5 மணி வரை ஆர்டர் செய்தால் வீடு தேடி மது விநியோகம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கேரள முதல்வர் இதுபோன்ற முடிவு ஒன்றை அறிவித்து அதற்கு நீதிமன்றம் தடை விதித்த நிலையில் மம்தாவின் உத்தரவு எப்படி நிறைவேற்றப் பட போகிறது என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
SK 23:…
நடிகர் அஜித்தின்…
நடிகர் யோகிபாபு…
Rajkumar periyasamy:…
மாரி செல்வராஜ்…