என்னை பாலோ செய்த ஓரினச்சேர்க்கையாளர் – சின்னத்திரை தொகுப்பாளர் சொன்ன பிளாஷ்பேக் !

a2923e26b9250964a87dc8cff956ab8e

தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வரும் ரக்‌ஷன் தான் ஒரு நபரால் பாலோ செய்யப் பட்டது தொடர்பாக கூறியுள்ளார்.

விஜய் டிவியின் சில நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக இருந்து பிரபலமானவர் ரக்‌ஷன். இப்போது இவர் துல்கர் சல்மான் நடிப்பில் வெளிவர இருக்கும் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் எனும் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாக உள்ளார்.

இந்நிலையில் இவர் சமீபத்தில் அளித்த நேர்காணல் ஒன்றில் தன்னை பாதித்த சம்பவம் ஒன்றைப் பற்றி சொல்லியுள்ளார். அதில் ‘நான் ஒருநாள் அரைக்கால் சட்டைப் போட்டு ஜாலியாக சுற்றிக் கொண்டு இருக்க, என்னை ஒரு நபர் பாலோ செய்து கொண்டு வந்தார். அவர் என்னை ஓரினச்சேர்க்கையாளன் என நினைத்துள்ளார். அவர் என்னைத் துரத்தியது போதுதான் பெண்கள் ஆன்களால் ஸ்டாக்கிங் செய்யப்படும் போது எப்படி பதற்றமாக உணர்வார்கள் என்பதை புரிந்துகொண்டேன்’ எனக் கூறியுள்ளார்.

Categories Uncategorized

Leave a Comment