">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
சிகிச்சை அளிக்காவிடில் மருத்துவமனை அங்கீகாரம் ரத்து – தமிழக அரசு அதிரடி
இந்தியா முழுவதும் கொரானா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதால் அதை தடுக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் வீட்டில் முடங்கியுள்ளனர்.
அதேநேரம் மக்களுக்கு அத்தியாவசிய தேவையான மருத்துவமனை, மருந்து கடை, மளிகை கடை, காய்கறி கடை ஆகியவை திறந்திருக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
ஆனால், சில மருத்துவமனைகளில் டயாலிஸ் செய்ய மருத்துவர்கள் மறுப்பதாகவும், கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க மருப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.
இந்நிலையில், கர்ப்பிணிகள், குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்காவிடில் தனியார் மருத்துவமனைகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.