சமீபத்தில் பாஜக தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித்ஷா அவர்கள் குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு ஆதரவாக கருத்து தெரிவிக்க விரும்புபவர்கள் மிஸ்டுகால் மூலம் தெரிவிக்கலாம் என்று கூறி ஒரு மொபைல் எண்ணை அறிவித்தார். அந்த ஒரே ஒரு எண்ணுக்கு மட்டும் இரண்டு நாட்களில் 68 லட்சம் மிஸ்டுகால் வந்திருப்பதாக பாஜகவினர் தெரிவித்துள்ளனர்
இது எப்படி சாத்தியம் என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஒரே ஒரு எண்ணிற்கு 48 மணி நேரத்தில் 68 லட்சம் மிஸ்டு கால்கள் வர வேண்டுமென்றால் சுமார் 70 நாட்களுக்கு மேல் ஆகும் என்றும் ஒரு மணி நேரத்திற்கு அதிகபட்சமாக 3600 மிஸ்டு கால்கள் தான் வரும் என்றும் அப்படிப் பார்த்தால் இந்த கணக்கு சாத்தியமே இல்லை என்றும் கூறிவருகின்றனர்
இதனை அடுத்து பாஜகவினரின் பொய் மூட்டைகளை அவிழ்த்து விடப்பட்டுள்ளதாக நெட்டிசன்கள் இடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் 100 கோடிக்கு மேல் மக்கள் தொகை உள்ள ஒரு நாட்டில் வெறும் 68 லட்சம் தான் ஆதரவு என்பதால் மீதமுள்ள கோடிக்கணக்கான பேர் இந்த சட்டத்திற்கு எதிராக இருப்பவர்கள் என்றுதானே அர்த்தம் என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்
ஆர் ஜே…
Pushpa 2:…
சமீபத்தில் தனுஷ்,…
ஏ ஆர்…
Biggboss Tamil:…