சத்யராஜே கைவிரித்த போதும்... விடாமல் பிளான் பண்ணி சிவாஜி படத்தில் நடிக்க வைத்த பாரதிராஜா

by ராம் சுதன் |

நடிகர் திலகம் சிவாஜி நடித்த முதல் மரியாதை படத்தில் வடிவுக்கரசியின் வாழ்க்கையை அப்படியே சூறையாடிவிட்டு அவரை நட்டாற்றிலே விட்டுவிட்டுச் செல்லும் இளைஞர் கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடித்தால் நன்றாக இருக்கும் என்று எங்களுக்குத் தோன்றியது.

எப்படியாவது சத்யராஜை நடிக்க வைத்து விட வேண்டும் என்று நான் இருந்தேன். அப்போது மாதத்தின் 30 நாள்களும் சத்யராஜிக்குப் படப்பிடிப்பு இருந்தது.

பல திரைப்படங்களில் வில்லனாக நடித்துக் கொண்டு இருந்தார். முதல் மரியாதை படத்தில் இந்தப் பாத்திரத்தில் எப்படியாவது நடிச்சா நல்லாருக்கும்னு அவரிடம் சொன்னபோது எனக்கும் பாரதிராஜாவின் படத்தில் நடிக்கணும்னு ஆசை தான். ஆனா என்ன பண்றது? ஒரு நாள் கூட இல்லையே என்றார்.

அப்போ தான் எனக்கு ஒரு யோசனை தோன்றியது. சென்னையிலே 2வது ஞாயிற்றுக்கிழமையில் படப்பிடிப்பு நடக்காது. தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர் சம்மேளனம் விதித்திருந்த கட்டுப்பாடு.

அப்போது எப்படிப் பார்த்தாலும் 2வது ஞாயிற்றுக்கிழமை படப்பிடிப்பு நடக்காது. நீங்க ஞாயிற்றுக்கிழமை காலையில் பர்ஸ்ட் பிளைட்டைப் பிடிச்சி இங்க வந்துருங்க. அன்று இரவுக்குள் படப்பிடிப்பை முடித்து அனுப்புவது எனது வேலைன்னு சொன்னேன்.

அதற்கு சத்யராஜூம் ஒப்புக்கொண்டார். அப்போது என்னிடம் தயாரிப்பு நிர்வாகியாக இருந்த ராமவாசுதேவனைத் தொடர்பு கொண்டு சத்யராஜை மைசூருக்கு அனுப்பி வைப்பது உன்னுடைய வேலை என பொறுப்பை ஒப்படைத்தேன்.

அவரும் அந்தப் பணியை மிகச்சிறப்பாக செய்தார். சத்யராஜ் ஞாயிறு காலை வந்து சத்யராஜ் இறங்கினார். ஞாயிறு மாலைக்குள் சத்யராஜூக்கான படப்பிடிப்பை முடிக்க வேண்டும் என்று தான் சொல்லி இருந்தேன். ஆனால் அன்று மாலை நாலரை மணிக்குள் படப்பிடிப்பை முடித்து அனுப்பி வைத்தார் பாரதிராஜா.

அந்தப் பிளானிங்கும், பாரதிராஜாவின் சுறுசுறுப்பும் இல்லைன்னா சத்யராஜ் அந்தப் படத்தில் நடித்திருக்க முடியாது. அந்தப் படம் அவருக்கு எவ்வளவு பெரிய வெற்றிப்படமாக இருந்தது என்பது உங்களுக்கே தெரியும். மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.

Next Story