ரஜினி படத்தில் நயன்தாரா நடிக்க ஒத்துக் கொண்டது எப்படி ? குழம்பும் ரசிகர்கள்!

Published on: February 1, 2020
---Advertisement---

a229c27e3d983955c660f0f1689eda50

ரஜினி நடித்த தர்பார் படத்தை அடுத்து அவர் நடிக்கும் தலைவர் 168 படத்திலும் நயன்தாரா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

நயன்தாராவுக்கு என தனியாக தமிழ் சினிமாவில் ஒரு மார்க்கெட் இருந்தாலும் அவர் தங்களுடைய படங்களில் நடிப்பதை பெரிய நடிகர்கள் விரும்புவதால் அவரை பெருந்தொகை கொடுத்து படங்களில் ஒப்பந்தம் செய்கின்றனர் தயாரிப்பாளர்கள். ஆனால் படங்களிலோ துண்டு துக்கடா வேடங்களைக் கொடுத்து ஏமாற்றி விடுகின்றனர்.

கடைசியாக அவர் நடித்த பிகில், தர்பார் படங்களில் அவரின் கதாபாத்திரம் நகைப்புக்குரியதாக மாறியது. இதனையடுத்து பெரிய நடிகர்களின் படங்களில் நடிப்பதில்லை என முடிவெடுத்திருந்த நயன்தாரா இப்போது ரஜினியின் அடுத்த படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். இந்த திடீர் முடிவுக்கு என்ன காரணம் என்றால் படத்தின் இயக்குனர் சிவாதான் என சொல்லப்படுகிறது.

அவர் அஜித்தை வைத்து இயக்கிய விஸ்வாசம் படத்தில் அஜித்துக்கு நிகரான கதாபாத்திரத்தை நயன்தாராவுக்கு கொடுத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனாலேயே அவரை நம்பி இந்த படத்தில் ஒத்துக்கொள்ள ஆரம்பித்துள்ளார்.

Leave a Comment