1. Home
  2. Latest News

நாகேஷூக்குப் போயா இந்தப் பாட்டை வைப்பீங்க..? டிஎம்எஸ் எரிச்சல்... சாதித்த தயாரிப்பாளர்

அவளுக்கென்ன பாடல் நாகேஷூக்கு மறக்க முடியாதது. அவரது திரையுலக வாழ்வில் அந்தப் படமே ஒரு மைல் கல்..!

சர்வர் சுந்தரம் படத்தில் நாகேஷ் தோன்றிய 'அவளுக்கென்ன...' பாடல் பிறந்த கதையை தயாரிப்பாளர் ஏவிஎம்.குமரன் இவ்வாறு சொல்கிறார்.

பாடலுக்கு ரெக்கார்டிங் எப்படி நடக்குது? கம்போஸ் எப்படி நடக்குது? அங்கிருந்து சூட்டிங் எப்படி நடக்குதுன்னு எல்லாத்தையும் காட்டணும்னு சொன்னேன். கண்டிப்பா காட்டுவோம்னு சொன்னார் டைரக்டர் பஞ்சு. அதுதான் சர்வர் சுந்தரம் படத்தில் வரும் அவளுக்கென்ன பாடல்.

அப்போ எம்எஸ்.வி.கிட்ட சார் இந்த மாதிரி ஒரு ஐடியான்னு சொன்னேன். ஐயய்யோ நான்லாம் நடிக்க மாட்டேன்னாரு. இந்தப் பாட்டு எவ்வளவு கஷ்டப்பட்டு எடுத்துருக்குன்னு ஜனங்க உணரனும்.

நீங்க கொஞ்சம் சூட் போட்டு உங்க ட்ரூப்போடு வந்து கோஆப்ரேட் பண்ணுங்கன்னு சொன்னேன். அப்புறம் எம்எஸ்வி. ஒத்துக்கிட்டாரு. டிஎம்எஸ்சும் ஒத்துக்கிட்டாரு. அவரு கேட்குறாரு.

இவ்வளவு கஷ்டப்பட்டு இந்தப் பாட்டை எடுக்கறீங்களே... இதுல யார் நடிக்கப் போறான்னு கேட்டாரு. நாகேஷ்னு சொன்னேன். ஏன் சார் இவ்ளோ நல்ல பாட்டைப் போயி எம்ஜிஆரோ, சிவாஜியோ வந்து ஆடுனா அது மசாலா. ஜனங்க எப்படி என்ஜாய் பண்ணுவாங்க? இதைப் போயி நாகேஷ்னு சொல்றீங்களேன்னு கேட்டாரு.

படத்துல அந்தப் பாட்டு வந்து சூப்பர்ஹிட்டாச்சு. ஒரு நாள் வாக்கிங் வந்தாரு. நானும் வந்தேன். நீ ஜெயிச்சிட்டய்யான்னு சொன்னாரு. அது போதும் சார் உங்க வாழ்த்து ரொம்ப சந்தோஷம்னு சொன்னேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

பொதுவா ஒரு படத்துல மழை பெய்றது, காத்து அடிக்கிறதுன்னு படப்பிடிப்பை எல்லாம் அந்தக் காலத்துல படத்துல காட்ட மாட்டாங்க. ஆனா வித்தியாசமா எல்லாத்தையும் காட்டியுள்ளார் ஏவிஎம் தயாரிப்பாளர். சர்வர் சுந்தரம் படத்தில் தான் இதுபோன்ற காட்சிகள் வருகின்றன.

பிற்காலத்தில் நாம் பல படங்களில் படம் முடிந்ததும் காட்சிகள் எப்படி எடுக்கப்பட்டன என கேமரா படம் பிடிப்பது, பாடலுக்கு ஆடுவது, காமெடி செய்வது என சூட்டிங்கின் போதும், அந்தத் தருணத்திலும் நடந்த விஷயங்களைக் காட்டினார்கள். தசாவதாரம், அவ்வை சண்முகி போன்ற படங்களில் இப்படி காட்டப்படும்.

இது ஹாலிவுட் படங்களில் அதிகம் காட்டப்படும். குறிப்பாக ஜாக்கிஷான் படங்களில் நாம் தவறாமல் பார்த்திருப்போம். ஆனால் எல்லாவற்றுக்கும் முன்னோடியாக நாகேஷ் படத்திலேயே அது வந்துள்ளது ஆச்சரியம் தான். அதற்கு ஏவிஎம் தயாரிப்பாளர் குமரனின் மாறுபட்ட சிந்தனையே காரணம்.

கட்டுரையாளர்கள்

CineReporters Team

CineReporters Team

Editorial Team Member

info@cinereporters.com

உங்கள் நம்பிக்கைக்குரிய பொழுதுபோக்கு செய்தி, திரைப்பட விமர்சனம் மற்றும் பிரபலங்களின் அப்டேட்ஸுக்கான தளம். சினிமா உலகின் சமீபத்திய தகவல்களை உங்களுக்காக கொண்டு வருகிறது.