2011 ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் தோனி தன்னை விட ரெய்னாவையே அணிக்குள் கொண்டுவர விரும்பினார் என யுவ்ராஜின் கருத்துக்கு ரெய்னா பதிலளித்துள்ளார்.
இந்தியாவை பொறுத்தவர 2011 ஆம் ஆண்டு உலகக்கோப்பை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அந்த தொடரில் பேட்டிங், பவுலிங் இரண்டிலும் சிறப்பாக செயல்பட்ட யுவ்ராஜ் தொடர் நாயகன் விருதுபெற்றார். ஆனால் அப்போது தோனி தன்னை அணியில் எடுக்கவே விரும்பவில்லை என்றும் தன்னைவிட ரெய்னாவையே அவர் அணிக்குள் கொண்டுவர விரும்பினார் என்றும் ஆனால் அப்போது நான் சிறப்பாக விளையாடியதால் வேறு வழியின்றிதான் என்னை சேர்த்தார் எனவும் கூறியது சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.
இதற்கு ரெய்னா இப்போது பதிலளித்துள்ளார். அதில் ‘தோனி எனக்கு ஆதரவு அளித்தது உண்மைதான். ஆனால் அதற்குக் காரணம் என் திறமைதான். அந்த நம்பிக்கையை நான் உண்மையும் ஆக்கினேன். தோனி எப்போதும் ஒருவருக்கு 2 போட்டிகளில் வாய்ப்பளிப்பார். அதில் திறமையை நிரூபிக்காவிட்டால் அணியில் இருக்க முடியாது. அந்த வகையில் தான் நானும் தோனியிடம் இரண்டு போட்டிகளில் வாய்ப்பு பெற்று, அதில் என்னை நிரூபித்தேன்.மிடில் ஆர்டரில் விளையாடுவதில் நிறைய சவால்கள் இருந்தாலும் அதை நான் விரும்பினேன்’ எனக் கூறியுள்ளார்.
Director Atlee:…
பேய்ப்படங்களைப் பார்ப்பது…
நானும் விஜய்…
நடிகர் நாகார்ஜுனாவின்…
இன்று வெற்றிமாறன்…