Home > சூரைப்போற்று படம் எப்படி உருவாகியது? - விவரிக்கும் சூர்யா (வீடியோ)....
சூரைப்போற்று படம் எப்படி உருவாகியது? - விவரிக்கும் சூர்யா (வீடியோ)....
by adminram |
இறுதிச்சுற்று திரைப்படம் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குனர் சுதா கொங்கரா. அதன்பின் சூர்யாவை வைத்து சூரரைப்போற்று திரைப்படத்தை இயக்கினார். இப்படத்தை சூர்யா தனது சொந்த பட நிறுவனமான 2டி எண்டர்டெயின்மெண்ட் மூலம் தயாரித்துள்ளார்.
ஆனால், படம் தயாராகி வெளியாகும் நிலையில் கொரோனா ஊரடங்கால் பட வெளியீடு தள்ளிப்போனது.எனவே, இப்படம் அமேசான் பிரைமில் வருகிற 30ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இப்படம் தயாரான விதம் குறித்து இப்படத்தின் இயக்குனர் சுதா கொங்கரா, சூர்யா உள்ளிட்ட படக்குழு பேசும் வீடியோவை 2டி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
சூரரைப்போற்று திரைப்படத்தை பார்க்க ஆவலாக காத்திருக்கும் சூர்யா ரசிகர்களுக்கு இந்த வீடியோ உற்சாகத்தை கொடுத்துள்ளது.
Next Story