More

அபிஷேக் பச்சன்  உடல் நிலை எப்படி உள்ளது… இன்னும் ஏன் டிஸ்சார்ஜ் ஆகவில்லை?

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நடிகர் அபிஷேக் பச்சன் தனது மருத்துவமனை நாட்கள் குறித்து பேசியுள்ளார்.

Advertising
Advertising

பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் குடும்பத்தில் அவர், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆராத்யா ஆகியோர் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மும்பையில் உள்ள நானாவதி மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சையில் குணமாகி ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆராத்யா ஆகிய இருவரும் முதலில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். அதன் பின்னர் சில நாட்களுக்குப் பின்னர்

அமிதாப்பச்சன் அவர்களும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இன்னமும் அபிஷேக் பச்சன் மட்டும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் அவர் ஏன் டிஸ்சார்ஜ் ஆகவில்லை என்பது குறித்து விளக்கமளித்துள்ளார். அதில் ‘மருத்துவமனையில் 26-வது நாள்டிஸ்சார்ஜ் திட்டம்இல்லை, பச்சன், உன்னால் முடியும். நம்பிக்கை கொள் ’ எனக் கூறியுள்ளார். அதனால் அவருக்கு இன்னமும் கொரோனா பாதிப்பு முழுமையாக குணமாகவில்லை என்பது உறுதியாகியுள்ளது.

Published by
adminram