சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள சூரரைப் போற்று திரைப்படம் அமேசான் பிரைமில் வெளியாக வுள்ள நிலையில அது எவ்வளவு கோடிக்கு விற்கப்பட்டது என்ற கேள்வி எழுந்துள்ளது.
கொரோனா காரணமாக சினிமா திரையரங்குகள் இன்னும் திறக்காத நிலையில் தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களை ஓடிடி பிளாட்பார்ம்களில் எக்ஸ்க்ளூஸிவாக ரிலீஸ் செய்து வருகின்றனர். தமிழ சினிமாவில் அதை முதலி தொடங்கி வைத்தது சூர்யாதான். தான் தயாரித்த ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள் எனும் திரைப்படத்தை ரிலிஸ் செய்தார்.
இதையடுத்து அவர் இப்போது தன்னுடைய சூரரைப் போற்று திரைப்படத்தையும் ஓடிடியில் ரிலீஸ் செய்யவுள்ளார். அக்டோபர் மாதம் 30 ஆம் தேதி ரிலீஸாகவுள்ள இந்த படத்தை மிகப்பெரிய விலை கொடுத்து அமேசான் ப்ரைம் நிறுவனம் வாங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. வழக்கமாக சூர்யாவின் படங்களின் திரையரங்க விநியோக உரிமை 50 முதல் 60 கோடி ரூபாய்க்கு விற்கப்படும். மேலும் தெலுங்கு மற்றும் இதர மொழிகளில் டப்பிங் என 20 கோடி ரூபாய் வரை போகும். அதனால் ஓடிடியில் சூர்யா தனது இந்த மார்க்கெட்டை குறிவைத்து 70 முதல் 85 கோடி ரூபாய்க்கு விற்றிருக்கலாம் என கணிக்கப்படுகிறது.
லைகா நிறுவனத்தின்…
நயன்தாரா, தனுஷ்…
தளபதி 69…
சூர்யா அடுத்து…
சர்தார் 2…