Man Vs Wild நிகழ்ச்சிக்கு ரஜினியின் சம்பளம் இத்தனை கோடியா? தலை சுத்திடுச்சி….

டிஸ்கவரி சேனலில் வெளியாகும் 'மேன் வெர்சஸ் வைல்ட்’ என்ற நிகழ்ச்சி மிகவும் புகழ்பெற்றது.இந்நிகழ்ச்சியில் அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, பிரதமர் மோடி உள்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்நிகழ்ச்சியை பியர் க்ரில்ஸ் நடத்தி வருகிறார். இந்த நிகழ்ச்சி மூலம் இவர் உலகம் முழுக்க பிரபலமடைந்துள்ளார். 

இந்நிகழ்ச்சியில், சமீபத்தில் ரஜினியும் கலந்து கொண்டார். மைசூர் அருகே உள்ள பந்திபுரா புலிகள் காப்பகத்தில் இந்த இந்த ஆவணப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. படப்பிடிப்பு குழுவினருடன் ரஜினிகாந்த் நிற்கும் புகைப்படங்களும் வெளியான சமூக வலைத்தளங்களில் பரவியது.

இந்நிலையில், இந்நிகழ்ச்சிக்காக ரஜினி ரூ.1 கோடி சம்பளம் பெற்றுள்ளது தெரியவந்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு வெறும் 2 நாட்கள் மட்டுமே நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
adminram