தர்பார் எவ்வளவு நஷ்டம்? நாங்கள் வாங்கி தருகிறோம்.. கடம்பூர் ராஜு பேட்டி

கலவையான விமர்சனங்களை பெற்ற இப்படத்தை அதிக விலைக்கு வாங்கியதில் ரூ.65 கோடி நஷ்டம் அடைந்ததாக வினியோகஸ்தர்கள் கூறி வருகின்றனர். இது தொடர்பாக ரஜினியை சந்தித்து பேசும் முயற்சியிலும் அவர்கள் இறங்கியுள்ளனர். ஆனால், ரஜினி இன்னும் அவர்களை சந்திக்கவில்லை.

இந்நிலையில், இணையதளத்தில் திரையரங்க டிக்கெட் விற்பனையை முறைப்படுத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் கடம்பூர் ராஜு அதன்பின் செய்தியாளர்களிடம் பேசியது போது ‘தர்பார் திரைப்படத்தால் நஷ்டம் அடைந்த விநியோகஸ்தர்கள் அரசை அணுகினால் அவர்களுக்கு அரசு உதவும்’ எனக் கூறினார்.

மேலும், ஆன்லைன் மூலம் அரசே டிக்கெட் விற்பனை செய்யும் விவகாரத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் விலை நிர்ணயிக்கப்படும். அதேபோல், பண்டிகை காலங்களில் சிறப்பு காட்சிகளுக்கும் அரசே டிக்கெட் விலையை நிர்ணயிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

Published by
adminram