More

கொரோனா வைரஸிடம் இருந்து தப்பிப்பது எப்படி? சித்த மருத்துவரான பார்த்திபன் !

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதல் குறித்து அச்சம் நிலவி வரும் நிலையில் அதில் இருந்து தற்காத்துக் கொள்வதற்காக நடிகர் பார்த்திபன் சில யோசனைகளைத் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

சீனாவில் 3000 க்கும் மேற்பட்டோரைத் தாக்கியிருக்கும் கொரோனா வைரஸ் இதுவரை 100க்கு மேற்பட்டவர்களை பலி வாங்கியுள்ளது. அந்த வைரஸ் தாக்குதல் சந்தேகம் இந்தியாவிலும் எழுந்துள்ளது. அந்த வைரஸ் தாக்குதலுக்கு மருந்து எதுவும் இல்லை என்பதால் மருத்துவர்கள் திண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் கொரோனா வைரஸ் அதிகமாக பரவ தொடங்கியிருப்பதால், ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ள முன்னெச்சரிக்கைகள் மூலம் விஷ காய்ச்சலிலிருந்து நம்மை தற்காத்துக்கொள்வது எப்படி?
1. வெறும் வயிற்றில் நிலவேம்பு கஷாயம் குடிக்கலாம்.
2. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கிலோய் (அம்ருதா / குடூச்சி/ சீந்தில்கொடி) கஷாயம் உட்கொள்ளலாம்.
3. ஐந்து கருமிளகை நன்றாக மென்று உட்கொள்ளலாம்.
4. கிருஷ்ண துளசி (கரு துளசி) சாறு வடிவத்தில் அல்லது மாத்திரை வடிவில்

வெறும் வயிற்றில் இரண்டு முறை தனியாகவோ அல்லது மேற்குறிப்பிட்ட அனைத்துடன் ஒன்றாகவோ எடுத்துக்கொள்ளலாம்என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

என்ற ஒரு தகவலைப் பகிர்ந்துள்ளார். ஆனால் அறிவியல் பூர்வமாக மருத்துவர்கள் இது பற்றி எதுவும் கூறாத நிலையில் எந்த ஆதாரமும் இல்லாமல் இதுபோன்ற தகவல்களை பகிரலாம் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Advertising
Advertising
Published by
adminram

Recent Posts