
இப்படம் பற்றிய எந்த அறிவிப்பும் படக்குழு வெளியிடுவதில்லை. இப்படம் பற்றி வினோத்தோ, தயாரிப்பாளர் போனிகபூரோ எந்த செய்தியும் கூறுவதில்லை. எனவே, வலிமை அப்டேட்டை கேட்டு கேட்டு அஜித் ரசிகர்கள் ஓய்ந்து போய் விட்டனர். எனவே, தங்கள் ஆதங்கங்களை அவர்கள் பல வழிகளில் வெளிப்படுத்தி வருகின்றனர்.
சமீபத்தில் தல ரசிகர் ஒருவர் ஒரு மீம்சை உருவாக்கியுள்ளார். விருமாண்டி திரைப்படத்தில் கமல் பேசும் ‘மன்னிக்குறவன் மனுஷன். மன்னிப்பு கேக்குறவன் பெரிய மனுஷன்’ என்கிற வசனத்தை மாற்றி ‘அப்டேட் கேக்குறவன் மனுசன்.. அப்டேட் கொடுக்குறவன் பெரிய மனுஷன்’ என பதிவிட்டுள்ளார். இந்த மீம்ஸ் அஜித் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
அப்டேட் கேக்குறவன் மனுசன் ( #Thala Fans)!
அப்டேட் குடுக்குறவன் பெரிய மனுசன் ( @BoneyKapoor )!!#Valimai pic.twitter.com/PygeUlUK3n
— Captain America™ (@SteveRogersOff) February 18, 2020