தூக்கு போடுவது எப்படி?.. மனைவியிடம் நடித்து காட்டிய புதுமாப்பிள்ளைக்கு நேர்ந்த கதி

by adminram |

0086e748c3f3535fa9bcdc6c30c1a161

மதுரை சோலையழகுபுரம் பகுதியில் வசித்து வந்தவர் முகமது அலி(25). இவர் ஒரு லாரி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். ஒரு மாதத்திற்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது. வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 10.30 மணியளவில் தனது மனைவியுடன் ஜாலியாக பேசிக்கொண்டிருந்த முகமது அலி தூக்கு போடுவது எப்படி என நடித்து காட்டியுள்ளார்.

அப்போது, திடீரென அவரின் காலின் கீழே இருந்த நாற்காலி நழுவி விழுந்துவிட்டது. இதனால், அவரின் கழுத்தை தூக்கு கயிறு இறுக்கியது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த மனைவி சத்தம் போட்டு அக்கம்பக்கத்தினரை உதவிக்கு அழைத்து வந்துள்ளார். அவர்கள் முகமது அலியை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக மரணமடைந்தார்.

திருமணம் ஆன ஒரு மாதத்தில் விளையாட்டாக நடத்திய நாடகம் புதுமாப்பிள்ளையின் உயிரை பறித்த சம்பவம் அவரின் குடும்பத்தில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Next Story