More

ஒட்டகத்தக் கட்டிக்கோ…கெட்டியாக ஒட்டிக்கோ…

படத்தின் கதையைப் பார்த்தால் ஜென்டில்மேன் படத்தின் ஒட்டகத்தக் கட்டிக்கோ கெட்டியாக ஒட்டிக்கோ பாடலின் வரிகள் தான் நினைவுக்கு வருகிறது. இந்தப் பாடலின் வரிகள் போலத் தான் கதை உள்ளது. உலகம் முழுவதும் ஈத் முபாரக் என்று அழைக்கப்படும் பக்ரீத் பண்டிகை நாளை முதல் அனுசரிக்கப்படுகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்றே அனுசரிக்கப்பட்டு விட்டது. இஸ்லாமியர்களுக்கு இது தியாகத் திருநாள்.

Advertising
Advertising

பக்ரீத் என்பது 2019 ல் வெளிவந்த இந்திய தமிழ்த் திரைப்படம். இதனை ஜகதீசன் சுபு இயக்கினார். திரைப்படத்தில் விக்ராந்த், சாரா போன்றோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்தனர். கோலிவுட் வரலாற்றில் ஒட்டகத்தை முக்கிய வேடத்தில் சித்தரித்த முதல் இந்திய மற்றும் தமிழ் படம் இது.  இப்படத்தை எம் 10 புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்தது. இத்திரைப்படத்திற்கு டி. இமான் இசை அமைத்திருந்தார்.

விக்ராந்த் ஒரு விவசாயி. அவர் ஏழ்மையில் வாழ்கிறார். எதேச்சையாக ஒட்டகம் ஒன்றை அவர் வளர்க்க ஆரம்பிக்கிறார். ஆனால் ஒட்டகத்தை வளர்க்க இயலாமல் வருத்தம் கொள்கிறார். ஒட்டகத்தை இந்த சூழலில் வளர்க்க இயலாது என உணர்கிறார். அதனால் ராஜஸ்தானில் கொண்டு சென்று விட்டுவிடலாம் என பயணிக்கிறார். 

இப்படத்தை ஜெகதீசன் சுபு இயக்கினார். டி.இமான் இசை அமைத்தார். விக்ராந்த், வசுந்தரா காஷ்யப், தினேஷ் பிரபாகர், எச்.எல்.ஸ்ருதிகா, எம்.எஸ்.பாஸ்கர் தக்ஷயினி உள்பட பலர் நடித்தனர். மனிதனுக்கும் ஒட்டகத்துக்கும் இடையில் பகிர்ந்து கொள்ளப்பட்ட பிணைப்பை ஆராய்வதை வெளிப்படும் முதல் படம். ராஜஸ்தானில் நடந்த படப்பிடிப்பின்போது ஒட்டகம் தேவைப்பட்டது. இதில் சாரா என்ற ஒட்டகம் தேர்வானது.

விக்ராந்த் ஒட்டகத்துடன் 2 மாதங்களாக பயிற்சி செய்தார். சென்னை, கோவா, ராஜஸ்தான், மகாராஷ்டிரா போன்ற பகுதிகளில் படமாக்கபட்டன. டி.இமான் இசையமைத்தார். இப்படத்திற்கு ஞானகரவேல மணி அமுதவன் ஆகியோர் பாடல்களை எழுதினர். லாரி லக்கி லாரி கரடு முரடு பூவே, ஆலங்குருவிகளா, கரடு மொரடு பூவே, ஆகிய பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், டீசர் சக்கை போடு போட்டது. ரசிகர்களால் பெரிதும் வரவேற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

ரசிகர்களுக்கு நம்ம டீம் சார்பாக பக்ரீத் நல்வாழ்த்துக்கள்

Published by
adminram

Recent Posts