திருநங்கைகளுடன் கணவன்.. டிக்டாக்கில் மனைவி… இறுதியில் நேர்ந்த விபரீதம்

3b516813dd928807ea1ed01c6438fc8f

பண்ருட்டி அன்வர்ஷா நகரில் வசித்து வருப்வர் குமாரவேல்(30). இவரின் மனைவி ராஜேஸ்வரி (27). இந்த தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் மகள் உண்டு. மனைவி செல்போனை அதிகம் பயன்படுத்துவதால் அவர் மீது குமாரவேல் சந்தேகப்பட்டு அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளார்.

கடந்த 14ம் தேதி காதலர் தினத்தன்று காலையில் வெளியே சென்ற ராஜேஸ்வரி இரவு வீடு திரும்பியுள்ளார். அப்போதும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. அதன்பின் ராஜேஸ்வரி தூங்க சென்றுவிட்டார். அப்போது மனைவியின் நடத்தையில் ஆத்திரமடைந்த குமாரவேல் இரும்பு கம்பியை எடுத்து ராஜேஸ்வரியின் தலையில் தாக்கியுள்ளார். அதன்பின்னரும் ஆத்திரம் தீராத அவர் ஆட்டுக்கல்லை எடுத்து வந்து அவரின் தலையில் போட்டுள்ளார்.

இதில் தலை நசுங்கு ராஜேஸ்வரி சம்பவ இடத்திலேயே இறந்து போனார். அதன்பின் வீட்டைப்பூட்டிவிட்டு குழந்தைகளுடன் குமாரவேல் தலைமறைவானார்.
அடுத்தநாள் வீட்டிலிருந்து ரத்தம் வெளியேறியதால் அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் ராஜேஸ்வரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தலைமறைவாக இருந்த குமாரவேலை கைது செய்தனர்.

போலீசாரின் விசாரணையில் பல தகவல்கள் வெளிவந்துள்ளது.குமாரவேல் கார் ஓட்டுனராக பணிபுரிந்து வந்துள்ளார். அப்போது, சில திருநங்கைகளுடன் தொடர்பு வைத்திருந்ததாகவும், இது தொடர்பாக ராஜேஸ்வரிக்கும் அவருக்கும் அடிக்கடி சண்டை எழுந்துள்ளது. அதேபோல், ராஜேஸ்வரி அதிக நேரம் டிக்டாக்கில் வீடியோ பதிவு செய்து வந்துள்ளார். அப்போது, சிலரிடம் அவர் பழகியதாக தெரிகிறது. இது தொடர்பாக குமாரவேல் அவரிடம் சண்டை போட்டு வந்துள்ளார். 

இந்நிலையில்தான் குமாரவேல் ராஜேஸ்வரியை கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

Categories Uncategorized

Leave a Comment