சூரரைப் போற்று பாத்துட்டேன் – ஒரே வார்த்தையில் விமர்சனம் சொன்ன மாதவன்!

நடிகர் மாதவன் தனது சைலன்ஸ் படத்தின் ப்ரோமோஷனுக்காக ரசிகர்களுடனான நேரலை உரையாடலில் பங்கேற்றார்.

Also Read

நடிகர் சூர்யா நடித்து உருவாகியுள்ள திரைப்படம்சூரரை போற்று”. சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள அக்டோபர் 30 ஆம் தேதி அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில் வரிசையாக ஓடிடியில் வெளியாகும்  படங்கள் எல்லாம் மோசமான விமர்சனங்களை பெற்று வரும் நிலையில் இந்த படமாவது நன்றாக இருக்குமா என்ற சந்தேகம் ரசிகர்கள் மனதில் எழுந்துள்ளது.

இந்நிலையில் சமிபத்தில் ரிலீஸான தனது சைலன்ஸ் படத்தின் பிரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட மாதவன் சூரரைப் போற்று திரைப்படம் பற்றி தனது விமர்சனத்தை தெரிவித்துள்ளார்.  ரசிகர் சூரரைப் போற்று திரைப்படம் பார்த்து வீட்டீர்களா படம் எப்படி இருக்கிறது?’ என கேட்க அதற்கு மாதவன் ஒற்றை வார்த்தையில் ‘mindblowing’ எனக் கூறியுள்ளார்.

Published by
adminram