நான் ரஜினியை சொல்லவில்லை – உதயநிதி ஸ்டாலின் பல்டி !

Published on: January 20, 2020
---Advertisement---

aecf402071ae373b42fd604f8f695369

டிவிட்டரில் அதிகமாக சூப்பர் ஸ்டார் ரஜினியை அதிகமாக விமர்சனம் செய்து வரும் திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அது குறித்து பதிலளித்துள்ளார்.

ரஜினி அரசியல் சம்மந்தமான கருத்துகள் தெரிவிக்கும் போதெல்லாம் திமுக இளைஞரணிச் செயலாளரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் டிவிட்டரில் அவரைக் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். சமீபத்தில் துக்ளக் விழாவில் பேசிய ரஜினியின் பேச்சுக்கு அவரது டிவிட்டே அதற்கு சாட்சி.

இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த நேர்காணல் ஒன்றில் ரஜினியை விமர்சிப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த உதயநிதி ஸ்டாலின் ‘நான் என் டிவீட்களில் ரஜினியைதான் குறிப்பிடுகிறேன் என எதை வைத்து சொல்கிறீர்கள். அவர் இன்னும் அரசியலுக்கே வரவில்லை. அவர் வந்த பின் இந்த கேள்விக்கான பதிலை நான் உங்களுக்கு சொல்கிறேன்.’ எனக் கூறியுள்ளார்.

Leave a Comment