
தமிழ் சினிமாவில் இடுப்பு வளைவு நடனத்திற்கு பெயர் போனவர் சிம்ரன். இவரின் நடன அசைவுகளுக்காகவே இவரின் திரைப்படங்கள் ஓடியது. திடீரென சில வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டு மும்பையில் செட்டில் ஆனார். அதன்பின் அவ்வப்போது திரைப்படங்களில் நடித்து வருகிறார். பேட்ட படத்திலும் ரஜினியுடன் நடித்திருந்தார்.
இந்நிலையில், ஆண் நண்பர் ஒருவருடன் நடன பயிற்சி எடுக்கும் வீடியோ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ‘நடனம் உங்கள் துயரங்களை போக்கும். இசையில் மூழ்குங்கள்’ என பதிவிட்டுருந்தார்.
மீரா மிதுன், ஷாலு ஷம்மு போன்றவர்கள்தான் இன்ஸ்டாகிராமில் இதுபோன்ற வீடியோக்களை வெளியிட்டு வந்தனர். தற்போது சிம்ரனும் இது போல் வீடியோவை வெளியிட துவங்கியுள்ளார். ஆனாலும், சிம்ரன் நடனத்திற்கு பெயர் போனவர் என்பதால் அவரோடு யாரையும் ஒப்பிட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.





