">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
நான் பயந்து போய் கெடக்குறேன் – சல்மான்கான் வெளியிட்ட வீடியோ
கொரானா காரணமாக நாடெங்கும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் முதல் பிரபலங்கள் வரை அனைவரும் வீட்டில் முடங்கியுள்ளனர்.
இதில் நடிகர் மற்றும் நடிகையர்களில் சிலர் சமூக வலைத்தளம் மூலமாக ரசிகர்களுடன் தொடர்பு கொண்டு தாங்கள் வீட்டில் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பது தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பாலிவுட் சூப்பர்ஸ்டார் சல்மான்கான் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். தனது சகோதரர் மகனுடன் தனது பண்ணை வீட்டுக்கு சென்ற அவர் கொரானா ஊரடங்கு காரணமாக அங்கேயே சிக்கிக் கொண்டதாகவும், வீட்டில் தனது தந்தை தனியாக இருக்கிறார். அவரை பார்த்து 3 வாரங்கள் ஆகிவிட்டது. பயமாக இருக்கிறது.இந்த நேரத்தில் யாரும் துணிச்சலை காட்ட வேண்டாம்’ எனவும் அந்த வீடியோவில் கூறியுள்ளார்.